அக்டோபரில் சனியின் மாற்றம் இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாய் அமையும்: தலைவிதி மாறும்
Saturn Transit: அடுத்த மாதம் சனிபகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அக்டோபரில் சனி பகவானின் மாற்றம், ராசிகளில் அதன் தாக்கம்: அடுத்த மாதம் அதாவது அக்டோபரில் சனி பகவான் தனது வக்ர நிலையை மாற்றி நேர் இயக்கத்தை தொடங்கப்போகிறார். மனிதர்கள் செய்யும் கர்மாக்களுக்கு ஏற்ப பலனளிக்கும் சனி பகவான், தனது வக்ர நிலையை மாற்றும்போது, சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைவார்கள், சிலர் வேதனை கொள்வார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்களை அளிப்பார்.
ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, அக்டோபர் 23 ஆம் தேதி வக்ரமாக உள்ள சனி பகவானின் பாதை நேர் இயக்கத்தில் மாறவுள்ளது. ஜூலை 12 ஆம் தேதி முதல் சனி பகவான் மகர ராசியில் வக்ர நிலையி கோச்சாரம் செய்து வருகிறார். இப்போது அடுத்த மாதம் சனிபகவான் தனது இயக்கத்தை மாற்றவுள்ளதால், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சனியின் இயக்க மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
விருச்சிகம்
ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக ராசிக்கு சனியின் இயக்க மாற்றம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்தில் வளர்ச்சியும் இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உத்யோகத்தில் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். இது தவிர, சொத்து மற்றும் வாகனம் வாங்குவதற்கான நல்ல யோகம் இப்போது உருவாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் சிறப்பாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில், சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வியாபாரத்தில் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இதன் மூலம் தொழிலில் சிக்கிய பணத்தை திரும்ப பெற முடியும். தந்தையின் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம்.
மேலும் படிக்க | கன்னி ராசிக்கு போகும் சுக்கிரன்! இந்த ராசியினரின் காதல் விருப்பங்களை நிறைவேற்றுவார்
மேஷம்
சனியின் பாதை மாற்றம் மேஷ ராசியினருக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு பணி இடத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். இதனுடன், வியாபாரத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். இது தவிர, உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் திடீர் பண வரவு இருக்கும். இந்த காலகட்டத்தில் குடும்பத்தின் பொருளாதார நிலையும் நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்கு சனி பகவானின் மாற்றம் மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. சனிபகவான் இந்த ராசியின் நன்மை தரும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இத்தகைய சூழ்நிலையில், சனி பெயர்ச்சி காலத்தில் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வுக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. வீடும் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும். இருப்பினும் குடும்பத்தில் பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும்.
துலாம்
ஜோதிட சாஸ்திரப்படி, மகர ராசியில் சனியின் சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை அளிக்கும். இந்த நேரத்தில், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். இத்தனை நாட்களாக வாட்டி வந்த பெரிய நிதி சிக்கலில் இருந்தும் விடுபடலாம். வியாபாரத்தில் முதலீடு செய்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கூடும். இந்த இடமாற்றம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Astro: திருமண தடையா... விரைவில் நாதஸ்வரம் ஒலிக்க சில எளிய பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ