ராகு பெயர்ச்சி பலன் 2023: ஜோதிடத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, 2023 இல் தனது ராசியை மாற்றப் போகிறார். அக்டோபர் 30-ம் தேதி ராசி மாறுகிறார் ராகு. பஞ்சாங்கத்தின்படி, ராகு அக்டோபர் 30, 2023 திங்கட்கிழமை மதியம் 1.33 மணிக்கு மீன ராசியில் நுழைகிறார். ராகு மீனத்தில் நுழைவதற்கு முன்பு மேஷ ராசியில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். அவர்களின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ராகு பெயர்ச்சி யாருக்கு சாதகமாக அமையும் யாருக்கு பாதகமாக அமையும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு சஞ்சாரம் சில ராசிகளை செல்வந்தர்களாக்கும்


கடகம்: ராகு சஞ்சாரத்தின் தாக்கத்தால் வியாபாரம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. தடைப்பட்ட வேலைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும்.


மிதுனம்: ராகு பெயர்ச்சியின் தாக்கத்தால் திடீர் பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. மதிப்பு மரியாதை கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. பதவியினால் கௌரவம் அதிகரிக்கும்.


மீனம்: ராகுவின் ராசி மாற்றத்தால் பணவரவு கூடும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம். நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பப் பெறலாம். தொழிலில் வெற்றி பெறலாம்.


கும்பம்: செல்வம் மற்றும் பேச்சுத்திறனுக்கான வீடு என்று அழைக்கப்படும் உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டிற்கு ராகுவின் சஞ்சாரம் இருக்கப் போகிறது. இதனால் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் மூலம் வருமானம் பெறலாம். கடனாகக் கொடுத்த பணத்தையும் திரும்பப் பெறலாம்.


மேலும் படிக்க | ஜனவரியில் நடக்க உள்ள 4 முக்கிய பெயர்ச்சிகள், இந்த ராசிகளுக்கு சிக்கல்


ராகு சஞ்சாரத்தினால் சிக்கலை சந்திக்கப் போகும் சில ராசிகள்


மேஷம்: மீனத்தில் ராகு சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்கள்  பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். முதலீடு செய்வதற்கு நேரம் சாதகமாக இல்லை. தேவையற்ற செலவுகள் கூடும். நிதி, உடல் மற்றும் மன பிரச்சனைகளுடன் குடும்ப பிரச்சனைகளும் அதிகரிக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.


ரிஷபம்: மன உளைச்சலை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கலாம். நீங்கள் எடுக்கும் வேலை திட்டமிட்டபடி சரியாக நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு.


கன்னி: ராகுவின் பிற்போக்கு சஞ்சாரத்தால் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். சிறிய பணிகளுக்கு அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உடல்நிலை மோசமாக இருக்கலாம். அதனால்தான் எச்சரிக்கையாக இருங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.


மகரம்: தேவையற்ற செலவுகள் கூடும். இதற்காக எச்சரிக்கையாக இருங்கள். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்வில் சிரமங்கள் ஏற்படும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் தீங்கு ஏற்படலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: சனி பெயர்ச்சியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க செய்ய வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ