2023 புத்தாண்டு இன்று முதல் தொடங்கியுள்ளது, இப்போது நம் மனதில் தோன்றும் முதல் கேள்வி இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கும் என்பது தான். இதனால் நாம் ராசிபலன்களை தேடி தேடி படித்து கொண்டிருப்போம். பொதுவாக ஜோதிடத்தில் ஒரு ராசிக்கு நன்மை மற்றும் தீமைகளை தீர்மானம் செய்வது கிரகங்ளின் பெயர்ச்சியை பொறுத்தே. சிலசமயங்களில், அவற்றின் மாற்றம் நமக்கு நன்மையையும் கொடுக்கும், சில சமயம் சங்கடத்தையும் ஏற்படுத்தும். அந்தவகையில், ஜனவரி மாதம் எந்த ராசியில் எந்த கிரகங்கள் பெயர்ச்சியாகப் போகிறார், இதனால் எந்த ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஜனவரி மாதம் 2023 நடக்க உள்ள மிக முக்கியமான பெயர்ச்சிகள்:
ஜனவரி 13: ரிஷப ராசியில் ஜனவரி 12 வரை வக்கிரமாக சஞ்சரிக்கும் ஆகும் செவ்வாய், ஜனவரி 13 முதல் வக்கிர நிவர்த்தி பெற்று சஞ்சரிக்கிறது.
மேலும் படிக்க | தனுசில் அஸ்தமனமாகும் புதன்! மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ‘சில’ ராசிகள்!
சூரியன் பெயர்ச்சி: 14 ஜனவரி 2023 மகர ராசி.
ஜனவரி 17 சனி பெயர்ச்சி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்த சனி, தற்போது 17 ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில், தனுசு ராசியினருக்கு ஏழரை சனி முடிவடைகிறது, மேலும் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. அதே போல, கடக ராசிக்கு அஷ்டம சனி தொடங்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி 2023: கும்பம் - 22 ஜனவரி 2023 ஆம் தேதி.
இந்த ராசிக்காரர்கள் மோசமான பலனைத் தரும்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன், சனி, சுக்கிரன் போன்றவர்களின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனை தரும். அதன்படி மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் முதல் மாதம் சற்று கடினமாக இருக்கும். இந்த நேரத்தில், வேலையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதே சமயம், ஜனவரியில் இந்த கிரகங்களின் சஞ்சாரம் குடும்பத்தைப் பற்றிய கவலையை அதிகரிக்கும். இந்த நேரத்தில், பணத்தை முதலீடு செய்வதற்கு முன் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
மேலும் படிக்க | ஜனவரி மாத ராசிபலன் 2023, இன்று முதல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ