இன்றைய ராசிப்பலன் -  17.03.2023


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்
இன்று குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.


ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடி வரும்.  உங்கள் ராசிக்கு காலை 10.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும் மதியத்திற்கு பிறகு சாதகப் பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | Astro: கிரக தோஷங்களை நீக்கி, செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் ‘கருமஞ்சள்’ பரிகாரங்கள்!


மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு காலை 10.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.


கடகம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.


சிம்மம்
இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.


கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


துலாம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.


விருச்சிகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.


தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.


மகரம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.


கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.


மீனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அசையா சொத்துகளில் உள்ள பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.


மேலும் படிக்க | 700 ஆண்டுகள் கழித்து உருவான பஞ்ச மஹாயோகம்: இந்த ராசிகளுக்கு அசத்தலான ராஜயோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ