குரு உச்சம்.. இந்த ராசிகள் மீது குரு பார்வை...பணக்கார யோகம்
குரு பெயர்ச்சியாகி ரிஷப ராசியை அடைந்தார். இப்போது குரு அடுத்த 1 வருடம் இந்த ராசியிலேயே இருப்பார். இந்த குரு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரும் முன்னேற்றத்தை தரும்.
Guru Peyarchi Palangal 2024: மே 1 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைந்தார். தேவர்களின் குருவான வியாழன் இந்த ராசியில் ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு மாதங்கள் அல்ல, வருடம் முழுவதும் தங்கப் போகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். குரு பகவான், தற்போது ரிஷப ராசியில் பயணித்து வருவதால், சில ராசிகளின் தொழில் வாழ்க்கையை மேம்படுத்தும் அல்லது சில ராசிகளுக்கு சவால்களை அளிக்கும் அல்லது சவால்களுக்கு தீர்வு காணும் அறிவுத்திறனை குரு பகவான் தருவார். எனவே எந்த ராசிக்கு குரு எப்படிப் பட்ட பலனை தருவார் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் - இந்த ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, பணியிடத்தில் வேலையை சரியான நேரத்தில் நினைத்தப் படி முடிப்பீர்க்கள். சிறுசிறு சவால்கள் இருக்கும் ஆனால் குருவிடம் இருந்து பெற்ற ஞானத்தைப் பயன்படுத்தி அவற்றை முறியடிப்பீர்கள்.
ரிஷபம் - ரிஷபம் ராசியில் வசிக்கும் போது இந்த ராசிக்காரர்களுக்கு குரு சிறப்பான ஆசிகளை வழங்குவார், அலுவலகத்தில் எந்தத் திட்டங்கள் கொடுக்கப்பட்டாலும், கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் அவற்றை எளிதாக முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மிதுனம் - இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் பாடங்களைப் புரிந்து கொண்டு கவனத்துடன் செயல்பட வேண்டும், இதைச் செய்வதன் மூலம் உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மகிழ்ச்சியும், அலுவலகத்தில் மரியாதையும் அதிகரிக்கும்.
கடகம் - அலுவலக வேலைகளில் கடினமாக உழைத்தால் மட்டுமே பலன் கிடைக்கும், வதந்திகளில் நேரத்தை செலவிடுவது பயனளிக்காது. அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும், மேலும் நீங்கள் உத்தியோகபூர்வ பணிக்காகவும் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில், பணிகளை முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டிய நேரம் இது. அலுவலகப் பணிகளில் சவாலான பணிகளைச் செய்து முடிப்பது உங்கள் நம்பகத்தன்மையை வலுப்படுத்தும் மற்றும் இதனால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். தொடர்ந்து உங்கள் வேலையில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கன்னி - இந்த ராசிக்காரர்கள் அலுவலக வேலைகளில் தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும், இதைச் செய்வதன் மூலம் உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்வதோடு உங்கள் திறமையையும் பிரகாசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் - துலாம் ராசிக்காரர்கள் வெளிநாடு செல்லலாம். வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற பலன்களைப் பெறலாம். தவறான பாதையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம் - அலுவலகத்தில் பணிபுரியும் போது ஏதாவது ஒரு வகையில் பலன்கள் கிடைக்கும், சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பலன்கள் உண்டாகும்.
தனுசு - இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில் கடினமாக உழைப்பீர்கள். உங்களுக்கு மனநிறைவைத் தரும்.
மகரம் - மகர ராசிக்காரர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கும், இதனால் பணியிடத்தில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியும். தொழில் இன்னும் சிறப்பாக செயல்படும்.
கும்பம் - அலுவலகப் பணியில் தவறான வழியில் லாபம் சம்பாதிக்க நினைக்காமல் இருப்பது நல்லது. நிதி ஆதாயம் மற்றும் பதவி உயர்வும் கூடும். அலுவலக வேலையாக வெளியே செல்ல நேரிடலாம்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் பணியிடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள், அதிர்ஷ்டம் உங்கள் கைவசம் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ