குரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் குரு பெயர்ச்சிக்கும் சனி பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது. மே 1 ஆம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். 

 

Guru Peyarchi Palangal: சுப கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மக்களுக்கு பல நற்பலன்களை அளிக்கிறார். அவரது ராசி மாற்றம், அதாவது குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. மே 1, 2024 அன்று பெயர்ச்சியான குரு, அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்ச்சி அடைந்து அதன் பிறகு பிப்ரவரி 4, 2025 அன்று வக்ர நிவர்த்தி அடைவார். 2025 ஆம் ஆண்டில், மே 14 ஆம் தேதி, குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து வெளியேறி மிதுன ராசிக்கு மாறுவார். மே 1 அன்று நிகழ்ந்த குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

திருமண வாழ்க்கை, குழந்தைகள், வேலை, கல்வி, வியாபாரம் ஆகியவற்றின் காரணி கிரகமான குரு பாவான் மே 1 ஆம் தேதி ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

2 /11

சமீபத்தில் நடந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு குரு அருளால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பல வித வெற்றிகளை அடைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /11

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் நிகழ்ந்துள்ள குரு பெயர்ச்சியால் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். செலவுகளும் அதிகமாக இருக்கும். எனினும் இவை சுபச்செலவுகளாக இருக்கும். இந்த காலத்தில் பணம் சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். பண வரவு அதிகமாகும்.

4 /11

ரிஷபம்: குரு பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான லாபம் இருக்கும். இந்த ராசியில் குபேர யோகம் உருவாகுவதும் நன்மை பயக்கும். உங்கள் நிதி நிலை முன்பை விட மேம்படும். செலவுகளும் அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில், புதிய வேலைகளைத் தொடங்குவது சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.

5 /11

கடகம்: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அள்ளித் தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். 

6 /11

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பண வரவு அதிகமாகும், நிதி நிலை மேம்படும். தொழில் துறையில் வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை துணையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். குருவின் நல்ல செல்வாக்கால், உங்கள் நிதி நிலையும் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.  

7 /11

கன்னி: ரிஷப ராசியில் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். தொழிலில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும்.  

8 /11

மகரம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். செல்வம் பெருகும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் தொடர்புடையவர்கள் பணக்காரர்களாக மாறுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

9 /11

கும்பம்:  கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். நிலம், வீடு மட்டுமின்றி புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

10 /11

குரு பகவானின் அருள் பெற,   குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர;   குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ  என்ற ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.