இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றி

Budhan Peyarchi Palangal: மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2024, 09:45 AM IST
  • கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும்.
  • ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
  • வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகமாகும்.
இன்னும் 6 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பதவி உயர்வு, பண வரவு, அனைத்திலும் வெற்றி

Budhan Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் இளவரசரான புதன் மீண்டும் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மே 10 வெள்ளிக்கிழமை இரவு 07:03 மணிக்கு மீன ராசியிலிருந்து விலகி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆவார். மேஷத்தில் அவர் 21 நாட்களுக்கு இருப்பார். அதன்பின் மே 31ம் தேதி மதியம் 12:20 மணிக்கு புதன் ரிஷப ராசிக்குள் நுழைவார். 

Add Zee News as a Preferred Source

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். மிதுனம், கடகம் உள்ளிட்ட 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறலாம். அவர்களுக்கு முன்னேற்றத்தின் கதவுகள் திறக்கும். இந்த காலத்தில் இவர்கள் பெரிய சாதனைகளை செய்வார்கள். வீடு, வாகனம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கைகூடலாம். மேஷத்தில் புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம் (Gemini): 

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன் இருக்கும். இந்த காலத்தில் பல சாதனைகளை செய்வீர்கள். இதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். இதனால் நிதி நிலையில் மாற்றம் ஏற்படும். மிதுன ராசி மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருப்பதால் இந்த 21 நாட்களில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் விரும்பிய வெற்றியைப் பெறலாம். கடினமாக உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். 

கடகம் (Cancer): 

புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் பதவி மற்றும் கௌரவத்தை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் தொழிலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

சிம்மம் (Leo): 

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். நீண்ட நாட்களாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது நல்ல செய்தி கிடைக்கும். இந்த காலகட்டத்தில், சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும், எதிரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வரும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோ

துலாம் (Libra): 

புதனின் ராசி மாற்றம் துலா ராசிக்காரர்களுக்கு தொழிலில் அபிவிருத்தியை அளிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணத்தால் அனுகூலமான பல பலன்களை பெறுவீர்கள். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வேலையும் கிடைக்கலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 

தனுசு (Sagitttarius): 

புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமாக அமையும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் புரிதலும் அன்பும் இருக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பண வரவு அதிகமாகும். 

கும்பம் (Aquarius): 

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகமாகும். பண வரவு அதிகமாகும். மாத வருமானம் அதிகரிக்கும். மே 10 முதல் மே 31 வரை சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பகவான் வக்ரத்தால் 5 ராசிகள் ஜாக்கிரதை! சிக்கலை தவிர்க்க எளிய பரிகாரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News