தற்போது வக்ர இயக்கத்தில் இருக்கும் சனி பகவானும் புதனும் அக்டோபர் மாதத்தில் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளன. நீதியின் கடவுளான சனி மற்றும் கிரகங்களின் இளவரசரான புதன் ஆகிய இருவரும் அக்டோபரில் மாறுகின்றனர். இவர்களின் வக்ர நிலை, அதாவது பிற்போக்கு இயக்கத்தால், பல ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது. கிரகங்களின் நிலை மாறிய பின்னர், பிரச்சனைகளில் இருந்து இவர்கள் விடுபடுவார்கள். இது தவிர நான்கு ராசிக்காரர்களுக்கும் இது மிகவும் நல்ல காலமாக அமையப் போகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி பகவான் நமது கர்மாவுக்கு ஏற்றவாறு சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கும் நீதிக்கடவுள் என அழைக்கப்படுகிறார். புதன் சிறப்பிற்கும் செழுமைக்கும் உரிய கிரகமாக கருதப்படுகிறார். இப்போது இவற்றின் நிலை மாற்றத்துக்கு பின்னர், இவ்வளவு நாட்களாக சில ராசிகளை வாட்டி வதைத்த பணக்கஷ்டம் அகலும். 


மேஷம்: 


மேஷ ராசிக்காரர்களுக்கு சனி, புதன் சஞ்சாரம் அதிகமான சுப பலன்களைத் தரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் அதிக ஆர்டரைப் பெறலாம். இதைத் தவிர, வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். 


ரிஷபம்: 


ரிஷபம் ராசிக்காரர்களும் இவ்விரு கிரகங்களின் சஞ்சாரத்தால் நன்மை பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நிலை மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இப்போது சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 


மேலும் படிக்க | நவராத்திரியில் புதனின் பெரிய மாற்றம்: பண மழையில் நனையப்போகும் ராசிகள் இவைதான் 


மிதுனம்: 


மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ற இடமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் வருமானத்தில் அதிக உயர்வு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி இப்போது கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரம் பல இன்னல்களிலிருந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். 


தனுசு: 


தனுசு ராசிக்காரர்களும் புதன் மற்றும் சனியின் சஞ்சாரத்தால் நன்மை அடைவார்கள். இந்த ராசிக்காரர்கள் தீபாவளியன்று பல செல்வ வளங்களைப் பெறுவார்கள். அவர்களின் வருமானத்திலும் ஏற்றம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கும் இந்த நேரம் பலன்களைத் தரும். அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கிரகங்களின் சஞ்சாரத்தால் தீபாவளியன்று சலசப்பு, எந்த ராசிக்கு பாதிப்பு? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ