சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
Saturn Transit: ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.
சனி நீதியின் கடவுள் என்பதால், இந்த நேரத்தில் மக்கள் தவறான செயல்களைச் செய்தால், சனியின் அதிருப்தி அவர்களின் வாழ்க்கையை அழித்து விடும். இது தவிர ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தாலும் அந்த நபர் மோசமான பலன்களைப் பெறுகிறார். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் அல்லது ஏழரை நாட்டு சனி உள்ளவர்கள் கண்டிப்பாக சில பரிகாரங்களைச் செய்ய வேண்டும். இது சனியின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவாரணம் தரும்.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு துவங்கியது. சனி தேவன் 2022 ஜூலை 12 ஆம் தேதி காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். மகர ராசியில் சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால், சனியின் ஏழரை நாட்டு சனி மகரம், கும்பம் மற்றும் தனுசு ஆகிய 3 ராசிகளிலும், சனி திசை மிதுனம் மற்றும் துலா ராசி ஆகிய இரண்டிலும் நடக்கிறது. ஜனவரி 17, 2023 வரை சனி திசை தாக்கம் இருக்கும். சனி மகாதசை பாதிப்பை தவிர்க்க கீழ் கண்ட பரிகாரங்களை செய்யலாம்.
சனிபகவானின் அருளைப் பெறவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்:
1. தேவை இருக்கும் ஒருவருக்கு தானம் செய்யுங்கள். அவருக்கு உணவு, உடைகள், காலணிகள் மற்றும் செருப்புகளை தானம் செய்யுங்கள். இது சனி பகவானை மகிழ்விக்கிறது. இது தவிர கருப்பு எள், கருப்பு வஸ்திரம் தானம் செய்வதும் நல்லது.
மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!
2. சனி தோஷம் நீங்க, உளுந்து, கறுப்பு எள், இரும்பு ஆகியவற்றை கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இது நிவாரணம் தரும்.
3. சனி பகவானின் சாலிசாவைப் படியுங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி சாலிசா, சனி ஸ்தோத்திரம் அல்லது சனி தசரத்கிருத ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது நல்லது.
4. சனி அமாவாசை அன்று வீட்டில் சனி யந்திரத்தை நிறுவ மிகவும் நல்ல நாளாக கருதப்படுகிறது. இதனுடன் தினமும் வழிபடுவதால் அனைத்து பிரச்சனைகளும் நீங்கி பணவரவு உண்டாகும்.
மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்
5. சனி அமாவாசை அன்று நதியில் நீராடினால் சனி தோஷத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். இத்துடன் அனைத்து துன்பங்களும், பிரச்சனைகளும், தடைகளும் நீங்கி விடும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ