Saturns Direct in Aquarius 2024 : சனி வக்ர பெயர்ச்சி அடையும் போது, சனியின் மீது ​​அதன் பார்வையும் மிகவும் கொடூரமாக மாறும். சனிபகவான் கும்ப ராசியில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்த ராசியில் தற்போது நவம்பர் 15 ஆம் தேதி இரவு 8:39 மணிக்கு சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து அதாவது நேராக பயணிக்கத் தொடங்குகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனீஸ்வரர் நீதிதேவர் என்று பெயர் பெற்றவர், அவர் ஒருவருக்கு நல்லதைக் கொடுத்தாலும் அல்லது கெடுத்தாலும் அது நமது கர்மவினைகளின் அடிப்படையில் என்பது தொன்றுதொட்டுவரும் நம்பிக்கை. இந்த நிலையில், கும்பத்தில் வக்ர நிவர்த்தியாகும் சனீஸ்வரரின் சஞ்சாரத்தால், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


கும்ப ராசியில் சனி இருப்பதால், சனியின் தாக்கம் மகரம் மற்றும் மீன ராசிக்கு அதிக அளவில் இருக்கும். இந்த இரு ராசிகளைத் தவிர, சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம். 


மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனைகள் அதிகரிக்கப் போகும் இந்த காலத்தில் மனதில் சோர்வு ஏற்படும். சிறப்பாக செயல்பட்டு முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதற்கு உந்துதலாக பல தடைகளை சனீஸ்வரர் கொடுப்பார்.


சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு சோதனையான காலம் இது. அலுவலகத்தில் சிக்கல், நேர்மறையான சிந்தனை இல்லாமல் செயல்படும் சகாக்கள் என பின்னடைவுகளை கொடுக்கும் நேரமாக சனியின் இந்த வக்ரநிவர்த்தி இருக்கும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்வது ஒன்றே வழி.


மேலும் படிக்க | எத்தனைவித சனி பாதிப்புகள்? கண்டச்சனி முதல் ஏழரை வரை ஏழரையை கூட்டும் சனீஸ்வரரின் பார்வை பலன்கள்!


விருச்சிகம் (Scorpio Zodiac Sign) விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சோதனையான  காலகட்டமாக இருக்கும். பிறர் உங்களை விமர்சனம் செய்வதைவிட உங்களை நீங்களே மதிப்பீடு செய்ய வேண்டும். செய்த செயல்களின் நன்மை தீமைகளை அலசிப் பார்த்து, அல்லதை விலக்கி நல்லதை செய்வது சிறப்பு.  


மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களின் மனம் குழப்பமடைய ஆரம்பிக்கும் நேரம் இது. முடிந்து போன பிரச்சனைகளே மீண்டும் சவல்களாக முன்னெழும். எதிரிகள் மீது ஒரு கண் வைத்திருப்பது நல்லது.


கும்பம் (Aquarius Zodiac Sign): கும்பம் ராசிக்காரர்களுக்கு மனம் வருத்தங்கள் அதிகமாகும். கும்பத்தில் வக்ரமாய் இருக்கும் சனி பகவான், அதே ராசியில் வக்ரமடைவது, சொந்த ராசிக்காரர்களுக்கு பின்னடைவாக இருக்கும். ஜென்மச்சனியின் பாதிப்பில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு தெய்வ வழிபாடு ஒன்றே சரணாகதி.  


மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு விரயச்சனியாக இருக்கும் சனீஸ்வரர், காரிய தாமதங்களை ஏற்படுத்துவார். பண விரயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, செலவுகளை சுபசெலவாகவும், தானங்களாகவும் செய்துவிடுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தீபாவளியில் மகிழ்ச்சி பட்டாசு வெடிக்க பாற்கடல் நாயகி லட்சுமியின் அருளைப் பெற தந்தேரஸ் நாளில் குபேர பூஜை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ