Saturn Nakshatra Transit in Poorattathi Horoscope: சனியை ஆங்கிலத்தில் "saturn" என்பார்கள். ஒருவரின் ராசியில் சனி சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த ராசிக்கு அரசனைப் போல வாழ்க்கை கிடைக்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. ஆனால் ஏழரை சனியின் போது, ​​​​வாழ்க்கையில் புயல்களும், பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சனி பகவான் கூடிய விரைவில் தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். தற்போது குருவின் அதிபதி நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணித்து வரும் சனி பகவான் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி, 2024 அன்று, அதாவது இன்னும் 13 நாட்களில் வக்ர நிலையில் நகர்ந்து பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் பெயர்ச்சி அடைவார். இதன் பின்னர் சனியின் அடுத்த நட்சத்திர (Saturn Nakshatra Transit) மாற்றம் அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் நிகழும். தற்போது குருவின் நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், கோடீஸ்வர யோகத்தையும் தரப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Venus Ketu In Virgo: கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்


கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும். சட்ட விஷயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும், தொடர்ந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். பழைய முதலீடு மூலம் கட்டாயம் நிதி நிலை மேம்படும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செய்ய நேரிடலாம். 


விருச்சிகம் (Scorpio Zodiac Sign): விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நன்மை பயக்கும். பல ஆண்டுகளாக தடைப்பட்டு வந்த பணிகள் இப்போது வேகவேகமாக நிறைவு பெறும். செல்வம் பெருகும், வங்கி இருப்பு அதிக்கலாம். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வணிகர்களுக்கு இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சி காலம் மிகவும் சாதகமாக இருக்கும். மூதலீடு செய்வதன் மூலம் லாபம் ஈட்டலாம். 


கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சனியின் அருளால் பதவி உயர்வையும், நற்பெயரையும் பெறுவீர்கள். தொழிலின் மூலம் நிதி ஆதாயம் அடைவீர்கள். பணப் பிரச்சனை தீர்வுக்கு வரும். 


மேலும் படிக்க | Venus Transit: இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ