கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்

Venus Ketu Conjuction horoscope: சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு கன்னி ராசியில் தற்போது சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை நடக்கப் போகிறது. ஆகஸ்ட் மாதத்தில் கேது மற்றும் சுக்கிரன் கன்னி ராசியில் இணைந்து சில ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக பணத்தை வாரி தருவார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 5, 2024, 10:29 AM IST
  • பண வரவு, புகழ், பதவி உயர்வு போன்றவற்றை அள்ளித் தரும்.
  • எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை அள்ளித் தரும்.
  • சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை.
கேது சுக்கிரன் இணைவால் கோடி கோடியாக பணம்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும் title=

Venus Ketu Conjuction In Virgo Horoscope: ஜோதிடத்தின் படி, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பை அள்ளித் தரும் சுக்கிரன் கிரகம் 28 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். மறுபுறம் நிழல் கிரகமான கேது 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும். இது போன்ற நேரங்களில் கிரகங்களின் இணைப்பு ஏற்படும். அந்த வகையில் தற்போது ஆகஸ்ட் மாதம் கன்னி ராசியில் சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை நடக்கப் போகிறது. கன்னி ராசியில் சுக்கிரன் மற்றும் கேது கிரகத்தின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். பண வரவு, புகழ், பதவி உயர்வு போன்றவற்றை அள்ளித் தரும். 

கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி:
இந்நிலையில் இன்னும் 20 நாட்களில் அதாவது ஆகஸ்ட் 25, 2024 அன்று, சுக்கிரன் அதிகாலை 01:24 மணிக்கு கன்னி ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் இந்த ராசியில் ஏற்கனவே கேது கேது பயணித்து வருகிறார். அந்த வகையில் இந்த இரண்டு கிரகங்களும் 18 செப்டம்பர் 2024 வரை ஒன்றாக இணைந்திருக்கும். அதன் பிறகு சுக்கிரன் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைவார். எனவே சுக்கிரன் மற்றும் கேது இணைவது எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை அள்ளித் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

கடகம் (Cancer Zodiac Sign): சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை கடக ராசியின் மூன்றாவது வீட்டில் நடக்க உள்ளது. எனவே இந்த சேர்க்கையால் கடக ராசிக்காரர்கள் நிதி ரீதியாக பயனடைவார்கள். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். பணத்தை சேமிப்பீரகள். இதனால் வங்கி இருப்பு அதிகரிக்கலாம். கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகளை பெறலாம். உடன்பிறந்தவர்களுடன் நல்ல உறவுகள் உருவாகும், பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வை பெறலாம். பணியிடத்தில் அற்புதமான் சூழல் நிலவும்.

சிம்மம் (Leo Zodiac Sign): சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை சிம்ம ராசியின் இரண்டாம் வீட்டில் நடக்க உள்ளது. அத்தகைய சூழிலையில் சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து விதமான வெற்றியையும் பெறுவார்கள். நல்ல பணம் சம்பாதிக்க வாய்ப்பு பெறுவீர்கள். நிலம், புதிய கட்டிடம் அல்லது வாகனம் வாங்கலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவர்கள் விரும்பிய முடிவுகளை தேர்வில் பெறலாம்.

மேலும் படிக்க | இன்னும் 6 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டம், பொன்னான ராஜ பொற்காலம் பெறப்போக்கும் ராசிகள் இவைதான்

விருச்சிகம் (Scorpio Zodiac Sign): சுக்கிரன் மற்றும் கேதுவின் சேர்க்கை விருச்சிக ராசியின் பதினொன்றாம் வீட்டில் நடக்க உள்ளது. இதனால் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு பிறகு விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன், சம்பளமும் உயரலாம். வேலை செய்பவர்களுக்கு நினைத்த இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கலாம். விரும்பும் இடமாற்றத்தையும் நடைபெறும். வியாபாரிகள் வியாபாரத்தில் அதிக லாபத்தை ஈட்டுவார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் கடின உழைப்பால் வெற்றி பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு உச்ச பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணத்தை அள்ளி வீசுவார், தொட்டதெல்லாம் வெற்றிதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News