ஆகஸ்ட் 11ம் தேதி காலை 11:15 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையும் சுக்கிரன் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் தான் இருப்பார். சுக்கிரனின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் பார்ப்போம்.
பூரம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயரச்சி:
தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
சுக ஸ்தானமான சுக்கிரன் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை சிம்ம ராசியில் தான் பயணிப்பார்.
தற்போது சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார்.
சமீபத்தில் சுக்கிரன் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சியடைந்துள்ளது. தற்போது பூரம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடையப் போகிறார். மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் ஆகியவற்றை அள்ளித் தரும் சுக்கிரன் 11 ஆகஸ்ட் 2024 அன்று பூரம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இது 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.
ஆகஸ்ட் 11ம் தேதி காலை 11:15 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையும் சுக்கிரன் ஆகஸ்ட் 22ம் தேதி வரை இந்த ராசியில் தான் இருப்பார். சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பொன்னான வாழ்க்கை, நிதி ஆதாயத்தை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு தைரியத்தை தரும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவைப் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் வருமானம் பெருகும். குறிப்பாக சம்பள உயர்வு ஏற்படலாம். சிக்கியிருந்த பணத்தை திரும்பப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வச் செழிப்பு எதிர்பாராத அளவு பெருகும். பணியிடத்தில் சக ஊழியர்கள் முழு ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
சுக்கிர யோகம் அமைய, ஓம் அச்வத்வஜாய வித்மஹே.. தனூர் ஹஸ்தாய தீமஹி.. தன்னோ சுக்ரப்ரயோதயாத் என்கிற சுக்கிர காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.