Sani Peyarchi Palangal: ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மொத்தம் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்த வருடம் ஜனவரி மாதம் கும்ப ராசியில் சனி பெயர்ச்சி அடைந்தார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியில் இருப்பார். இதனிடையே சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படும் கிரகமாகும். ஏனெனில் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப சனி பலன்களை அளிப்பதால் சனி பகவானை நாம் நீதியின் கடவுள் என்று அழைக்கிறோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரே ராசியில் சனி அதிக காலத்திற்கு இருப்பதால் அவரது தாக்கமும் ராசிகளில் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஜனவரி 17, 2023 முதல் சனி பெயர்ச்சி (Sani peyarchi 2023 -2025) அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினார். சில ராசிக்காரர்களுக்கு இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைத்தாலும், ஒரு சில ராசிகளுக்கு கடுமையான காலமாக இருக்கும். அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனி பகவான் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்:
மேஷம்: லாப சனி
ரிஷபம்: கர்ம சனி
மிதுனம்: பாக்கிய சனி
கடகம்: அஷ்டம சனி
சிம்மம்: கண்ட சனி
கன்னி: ரோக சனி
துலாம்: பஞ்சம சனி
விருச்சிகம்: அஷ்டம சனி
தனுசு: சகாய சனி ( ஏழரை சனி முடிவு)
மகரம்: பாத சனி ஆரம்பம்
கும்பம்: ஜென்மா சனி ஆரம்பம்
மீன: விரய சனி ( ஏழரை சனியின் முதல் நிலை ஆரம்பம்.)


மேலும் படிக்க | ரிஷபத்தில் இணையும் புதன் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்..!!


2025 ஆம் ஆண்டு வரை எந்தெந்த ராசிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்:


மகரம் (Capricorn Zodiac Sign): மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை திருமண வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படலாம். பல சவால்களைச் சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் பெரிய முன்னேற்றம், லாபத்தை எதிர்பார்க்க முடியாது. உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு முன் புதிய தொழில், வியாபாரத்தை தொடங்குவதை தவிர்க்கவும். புதிய வேலை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் மந்த நிலையும், புதிய தொழில் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.


மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை தொழில், வியாபாரம், வேலை, திருமண வாழ்க்கை உள்ளிட்டவை பாதிக்லாம். உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்தை அடைய முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது நல்லது. கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். மன அமைதி இன்மை ஏற்படலாம்.


(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் பெரிய வெற்றி, முன்னேற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ