சனி பெயர்ச்சி பலன்கள்: 2025 வரை இந்த ராசிகளுக்கு குபேர யோகம், கோடிகளில் புழக்கம்!!

Sani Peyarchi Palangal: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். ஒரே ராசியில் அதிக நாட்களுக்கு இருப்பதால் ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. 

Sani Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பதால் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் கடந்த ஆண்டு மகர ராசியிலிருந்து தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி ஆனார். சனி பெயர்ச்சி முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி பகவான் தனது சொந்த ராசியில் இருப்பதால் ஷஷ ராஜயோக, கேந்திர திரிகோண ராஜயோகம் ஆகிய யோகங்கள் உருவாகியுள்ளன. இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில்தான் இருப்பார். 2025 ஆம் ஆண்டு அவர் தனது ராசியை மாற்றுவார். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் அனைத்து 12 ராசிகளிலும் கிடைக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: மேஷ ராசியினருக்கு சனி பெயர்ச்சி பல நல்ல வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. 2025 வரை இவர்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறி இலக்கை அடைவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். உங்களின் பொருளாதார நிலை முன்னேறும். 

2 /13

ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு 2025 வரை சாதகமான காலமாக இருக்கும். இந்த ஆண்டு தொழில், வியாபாரம் இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரம் விரிவடையும் யோகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

3 /13

மிதுனம்: சனி பெயர்ச்சி காலம் மிதுன ராசியினருக்கு கலவையான பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு அவ்வளவு சிறப்பாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்கள் கடின உழைப்பால், உங்கள் சம்பளத்தில் அதிகரிப்பை காணலாம்.

4 /13

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் சவால்கள் இருந்தாலும், கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். வேலையில் மன அழுத்தம் இருந்தாலும், உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் செல்வம் பெருகும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வேலை மாற்றத்துடன் உயர் பதவி கிடைக்கும்.

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சனி பெயர்ச்சி காலத்தில் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். எனினும் சற்று நிதானமாகவும் இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண வரவு அதிகமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி லாபகரமான பலன்களை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். எதிரிகளை தோற்கடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

7 /13

துலாம்: துலாம் 2025 வரை சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பல வித வெற்றிகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். திருமண வயதுடையவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இந்த நேரத்தில் விரும்பியவரை திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2025 வரை சில ஏற்ற இறக்கங்கள் காணப்படும். சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் பொருளாதார சிக்கல்கள் ஏற்படக்கூடும். உங்கள் குடும்பத்தை விட்டு விலகி மன உளைச்சலை சந்திக்க நேரிடும். புதிய வீடு, சொத்து வாங்கும் யோகம் உண்டு. தாயாரின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம், கவனமாக இருக்கவும்.

9 /13

தனுசு: இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்பால் அனைத்து வித பணிகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். சனி பெயர்ச்சியின் காரணத்தால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் யோகம் உண்டு. உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

10 /13

மகரம்: இந்த காலகட்டத்தில் குடும்ப சூழல் சற்று சிக்கலாகலாம். ஆனால் உங்கள் நம்பிக்கையுடன் நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். பண வரவு அதிகமாகும். செலவுகளும் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

11 /13

கும்பம்: இந்த ஆண்டு உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சனி பலவானின் அருளால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உயர் நிலையை அடைவீர்கள். உங்கள் ஆளுமை மேம்படும். உடன்பிறந்தவர்களின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, பின்னர் ஆரொக்கியம் சீராகும். 

12 /13

மீனம்: குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சனி பெயர்ச்சி பல நல்ல பலன்களை அளிக்கும். கால் மற்றும் கண் தொடர்பான ஏதேனும் காயம் அல்லது பிரச்சனையை சந்திக்க நேரிடலாம், ஆகையால் கவனமாக இருப்பது நல்லது. முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். 

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.