ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜாதகத்தில் சாதகமான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  கிரகங்களின் பெயர்ச்சி, கிரகங்களின் நிலை மாற்றம், கிரகங்களின் மஹாதிசை ஆகியவை அனைத்து ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு கிரகம் எந்த ராசிக்காரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அசுபமாக அல்லது பலவீனமாக இருக்கும் நிலையில், குறிப்பிட்ட ஜாதகர் பெரும் பிரச்சனைகளில் சிக்க வேண்டியிருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, 7 வருடங்கள் நீடிக்கும் செவ்வாயின் மகாதசை ஜாதகரின் வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய் கிரகத்தின் மகாதசையின் போது, ​​ஒரு நபர் 7 ஆண்டுகள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், ​​நிலம், சொத்து போன்றவற்றில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. தகராறுகள், ரகசிய எதிரகள் போன்ற பிரச்சனைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உறவுகளில் சிக்கல்கள் அதிகரிக்கும். செவ்வாய் கிரகத்தின் மகாதிசை பாதிப்பில் இருந்து தப்பிக்க செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்தும் பரிகாரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.


அசுபமான செவ்வாயின் அறிகுறிகள்


ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் செவ்வாயின் நிலை அசுபமாக இருக்கும்போது, ​​அந்த நபர் முன்கூட்டியே அறிகுறிகளை உணரத் தொடங்குகிறார். இந்த நேரத்தில் நபர் கண் நோய் பிரச்சனையால் பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். அதே சமயம் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகள் இந்த காலகட்டத்தில் மனிதனை சூழ்ந்து கொள்கிறது. இது தவிர, அதிகப்படியான கோபம், பெருமை, இறைச்சி-மது அருந்துதல் மற்றும் உறவினருடன் கருத்து வேறுபாடு போன்ற பிரச்சனைகள் மனிதனைத் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன. செவ்வாயின் மகாதசை ஒருவருக்கு நடந்து கொண்டிருந்தால், சில பரிகாரங்களை செய்வதன் மூலம், அசுப பலன்களைக் குறைக்கலாம்.


மேலும் படிக்க | உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினம் எது ! 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட கல் விபரம் இதோ..!


செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்


1.  ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் செவ்வாய்க் கிழமை குளித்த பின் சிவப்பு நிற ஆடைகளை அணியவும். இதற்குப் பிறகு, ஓம் க்ரான் க்ரீன் க்ரௌன் ச: பௌமே நமஹ் என்ற இந்த மந்திரத்தை குறைந்தது 3,5 அல்லது 7 முறை உச்சரிக்கவும்.


2.  செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் வலுவாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் கிழமையன்று அனுமனுக்கு வெண்பூசணியை அர்ப்பணிப்பதன் மூலம், ஒரு நபர் நல்ல பலன்களைப் பெறுகிறார். செவ்வாய்க் கிழமையன்று சிறிதளவு மல்லிகைப்பூ எண்ணெய் பயன்படுத்தி வர செவ்வாய் கிரகம் பலப்படும்.


3. ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த, ஹனுமானை வழிபடுவது சிறப்பான பலன் தரும். இதுமட்டுமின்றி, இந்த நாளில் செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த முடிந்தால், பகவான் ஹனுமானுக்கு வெற்றிலை சாற்றலாம். 


4. செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த பவளம் அணியலாம். பவளம் செவ்வாய் கிரகத்திற்கான ரத்தினம் ஆகும். ஆனால் அதை அணிவதற்கு முன், ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுங்கள்.


5. செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த, சிவப்பு வஸ்திரம், தாமிரம், கோதுமை, வெல்லம் போன்றவற்றை தானம் செய்வது மங்களகரமாக கருதப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராகு - கேது பெயர்ச்சியினால் இன்னல்களை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ