உங்கள் ராசிக்கு ஏற்ற ரத்தினம் எது ! 12 ராசிகளுக்கான அதிர்ஷ்ட கல் விபரம் இதோ..!

நம்மில் பலருக்கு ராசிக்கல் அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நமது ராசிக்கு ஏற்ற கல் எது என தெரியாமல் சிறிது குழம்புவோம். இங்கே, உங்கள் ராசிக்கான சரியாக ராசிக்கல் எது என்பதை அறிந்து கொள்ளலாம். ஆனால், ராசிக்கல்லை அணிவதற்கு முன் ஜோதிடரை அணுகுவது நல்லது.

நவகிரக நவரத்தினக் கற்களை அணியக்கூடிய முறை என்பது ஜாதக ரீதியாக பார்த்து அணிவது நன்மையைக் கொடுக்கும். லக்னம், ராசி, எந்த தசா புத்தி நடக்கிறது, எந்தந்த கிரகம் பலமாக இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நமக்கு நன்மையைக் கொடுக்கும்.

1 /12

மேஷ ராசி: மேஷத்திற்கான ராசிக்கல் பவளம். செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டவர்கள் பவள கற்களை அணியலாம். வைரம் மற்றும் புஷ்பராக கல்லும் அணியலாம்.

2 /12

ரிஷப ராசி: சுக்கிரன் ஆளும் ரிஷப ராசிக்காரர்கள் வைரம் மற்றும் பச்சை அணியலாம்.

3 /12

மிதுன ராசி: மிதுன ராசியில் பிறந்தவர்களை ஆளுவது அறிவார்ந்த கிரகமான புதன்.  மரகதம் புதனுக்கான ராசிக்கல். இது தவிர வைரம், முத்து அணியலாம்.

4 /12

கடக ராசி: எச்சரிக்கை கிரகமான சந்திரன் கடக ராசிக்காரர்களை ஆளுகிறது. இவர்களுக்கு உகந்தது முத்து, கனக புஷ்பராகம்.

5 /12

சிம்ம ராசி: சிம்மம் சூரியனால் ஆளப்படுகிறது மற்றும் சூரியனுக்கான ராசிக்கல் மாணிக்கம், மேலும், புஷ்பராகம் அணியலாம். 

6 /12

கன்னி ராசி: புதனால் ஆளப்படும் கன்னிக்கு உகந்த ரத்தினம் மரகதம்.  வைரமும் அணியலாம்.

7 /12

துலாம் ராசி:  சுக்கிரனால் கட்டுப்படுத்தப்படும் துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும், நீலம் அணியலாம்.

8 /12

விருச்சிக ராசி: செவ்வாய் ஆளும் விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம்.  இது தவிர கனக புஷ்பராகம் அணியலாம்.

9 /12

தனுசு ராசி: குரு ஆளும் தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம்.  தவிர நீலமும் அணியலாம்.

10 /12

மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். இவர்கள்  நீலம், வைரம் அணியலாம். இவர்கள் வைரம் அணிவது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

11 /12

கும்ப ராசி: கும்ப ராசிக்கும் அதிபதி சனி பகவான். எனவே இவர்களும் வைரம், நீலம் அணியலாம்.

12 /12

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம், முத்து வைரம் ஆகியவை.