வேத ஜோதிடத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிக்க இரண்டரை வருடங்களும், ராசிகளின் சுழற்சியை முடிக்க 30 வருடங்களும் ஆகும். புத்தாண்டில் ஜனவரி 17ஆம் தேதி சனி கும்ப ராசியில் சனி பிரவேசிக்கப் போகிறது. பெயர்ச்சி காலத்தின் போது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சிலருக்கு அசுப பலனும் கிடைக்கும். மறுபுறம், சனிப்பெயர்ச்சிக்கு சரியாக 13 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 30ம் தேதிசனி அஸ்தமன நிலைக்கு வரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜனவரி 30, 2023 அன்று மதியம் 12.06 முதல் மார்ச் 6 இரவு 11.36 வரை சனி கிரகம் நிலைத்திருக்கும். இதற்குப் பிறகு, சனி ஜூன் 17, 2023 அன்று இரவு 10.48 மணிக்கு வக்ர நிலையை அடையும் மற்றும் நவம்பர் 4 அன்று வக்ர நிவர்த்தியாகும். இந்த வகையில் ஜனவரி 30ல் சனி அஸ்மனமாவதால் பல ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எந்த ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி தொடங்கும்


சனியின் அஸ்தமனத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை வருடங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அதே சமயம் மகர ராசிக்காரர்களுக்கு மூன்றாம் கட்ட ஏழரை நாட்டு சனி தொடங்கும். கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாம் கட்டமும், மீன ராசிக்காரர்களுக்கு முதல் ஏழரை நாட்டு சனியும் தொடங்கும்.


மேலும் படிக்க | திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வரரின் கிரகப் பெயர்ச்சி! உஷாராகும் 4 ராசிகள்


இதுதவிர மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் பாதிப்பு ஏற்படும். இருப்பினும், மகர ராசியில் ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் தொடங்கும் என்பதால், அவர்களின் துன்பங்கள் கணிசமாகக் குறையும். விலகும் வேளையில் சனி அவர்களுக்கு சுப பலன்களைத் தருவார்.


சனி திசையிலிருந்து விடுதலை பெறும் ராசிகள்


சனி பெயர்ச்சியை அடுத்து துலாம் ராசிக்காரர்கள் சனி திசையில் இருந்து விடுதலை பெறுவார்கள். கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடினமான கட்டம் தொடங்கும் என்று கூறலாம். இவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். பண இழப்பு ஏற்படலாம். நோய்வாய்பட வாய்ப்புள்ளது. மறுபுறம், மிதுனம் மற்றும் துலா ராசிகளுக்கு சனி தசை முடிவடையும். 


ஏழரை நாடு சனியில் இருந்து நிவாரணம் பெற பரிகாரங்கள்


- சனியின் கோப பார்வையில் இருந்து விடுபட, சனிபகவானை வழிபடவும், சனி வாரத்தில் விரதம் இருக்கவும்.


- சனி கோவிலில் சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.


- சனிக்கிழமையன்று கருப்பு எள் மற்றும் கருப்பு பொருட்களை தானம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அதுமட்டுமின்றி, இந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு உதவுவதும் சிறப்பான பலன்களைத் தருகிறது.


- சனிக்கிழமையன்று அனுமனை வழிபடுவதன் மூலம், சனிபகவானின் கோப பார்வை நம் மீது படாது. சுந்தரகாண்டத்தை தவறாமல் பாராயணம் செய்ய வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மீனத்தில் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகம்! செல்வந்தராகும் ‘3’ ராசிகள் இவை தான்!


மேலும் படிக்க | பழனி கோவில் முருகரின் நவபாஷாணம் மற்றும் கருவறை சிலைகள் ஆய்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ