சனி வக்ர பெயர்ச்சியால் கேந்திர திரிகோண ராஜயோகம்:வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் காரணமாக சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். அந்த வகையில் கர்மாவை வழங்குபவரும் நீதியின் கடவுளுமான சனி பக்கவானும் தனது சொந்த ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோக்கை உருவாக்கும். சனியின் வக்ர இயக்கம் சனியை இன்னுமும் பிடிவாதமாக ஆக்குவதால், இது மக்களின் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, சனி சுப பலன்களை அளித்தால், அதன் பலன் அதிகரிக்கும், அதேசமயம் எதிர்மறையான பலன்களை அளித்தால், அதன் தீவிரமும் அதிகரிக்கும். எனவே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் சுப பலன்களை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிகோண மற்றும் சனியின் வக்ர பெயர்ச்சியின் நல்ல பலன் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்


மேஷம்: வக்ர சனி மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களின் அனைத்து நிதி பிரச்சனைகளையும் நீக்க உதவும். அதேபோல் பணப் பலன்களைப் பெறுவீர்கள். புதிய வழிகளில் வருமானம் உண்டாகும். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். வியாபாரிகள் செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்.


மேலும் படிக்க | வக்ர் சனியால் உருவாகிறது 2 ராஜயோகங்கள், இந்த ராசிகளுக்கு பண மழை


ரிஷபம்: வக்ர சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல முக்கிய மாற்றங்களை கொண்டு வர முடியும். கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்கள் விரும்பிய வேலையைப் பெற செய்யும். அதேபோல் இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும், ஆனால் அதேசமயம் உங்களுக்கு மக்களிடையே கௌரவமும் பணமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை பொறுத்தவரை மிகச் சிறப்பாக இருக்கும்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் 17 ஆம் தேதி நடக்கப் போகும் சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக பல்வேறு துறைகளில் பலன்களைத் தரும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்கள் நிதி ஆதாயத்தையும் பெறுவீர்கள்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு வக்ர சனிப் பெயர்ச்சி சுப பலன்களைத் தருவார். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் அனைத்தும் இந்த நேரத்தில் முழுமையாக முடிவடையும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க இதுவே நல்ல நேரம் என்று கூறலாம்.


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு அதிபதியும் சனி, இதனால் மகர ராசிக்காரர்களுக்கு வக்ர சனி பெயர்ச்சியால் பலவித நன்மைகள் உண்டாகும். பணப் பலன்களைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிக்க புதிய வழிகளில் முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். தொழில் செய்யும் மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசம்: மேஷம் முதல் மீனம் வரை..முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ