வக்ர் சனியால் உருவாகிறது 2 ராஜயோகங்கள், இந்த ராசிகளுக்கு பண மழை

Saturn Retrograde 2023: ஜூன் 17 ஆம் தேதி சனி தனது ராசியான கும்பத்தில் வக்ர நிலை அடையப் போகிறது மற்றும் நவம்பர் 4 ஆம் தேதி வரை இந்த நிலையில் தான் இருக்கும். சனி வக்ர பெயர்ச்சியால் 2 சுப ராஜயோகங்கள் உருவாக்கப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 7, 2023, 03:23 PM IST
  • திரிகோண மற்றும் ஷஷ மகாபுருஷ ராஜ யோகத்தின் நல்ல பலன்
  • ஷஷ ராஜ யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும்.
  • சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து இந்த ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார்.
வக்ர் சனியால் உருவாகிறது 2 ராஜயோகங்கள், இந்த ராசிகளுக்கு பண மழை title=

திரிகோண ராஜ யோகம்/ ஷஷ மகாபுருஷ யோகம்: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் காரணமாக சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். அந்த வகையில் கர்மாவை வழங்குபவரும் நீதியின் கடவுளுமான சனி பக்கவானும் தனது சொந்த ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். மேலும் சனி ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார் என்பது ஜோதிட ஐதீகம். அதேபோல் சனி அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் ஓர் கிரகமாகும். இதன் காரணமாக அதன் சுப மற்றும் அசுப பலன்கள் 12 ராசிக்காரர்களின் மீது தெரியும்.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சனி தனது சொந்த ராசியான அதாவது அதன் அசல் திரிகோண ராசியான கும்பத்தில் நுழைந்து 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் தான் இருக்கும். இதற்கிடையில், சனி வருகிற ஜூன் 17 ஆம் தேதி அன்று அதன் ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது என்றும் நவம்பர் 4 வரை இதே நிலையில் தான் இருப்பார். இதனால் தற்போது இரண்டு சுப ராஜயோகத்தை உருவாக்கும், அதாவது திரிகோண மற்றும் ஷஷ மகாபுருஷ ராஜ் யோகம் ஆகும். அதன் சுப பலன் சில ராசிகளில் தெரியும். அந்த ராசிகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி இன்று: இந்த ராசிகளின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்

திரிகோண மற்றும் ஷஷ மகாபுருஷ ராஜ யோகத்தின் நல்ல பலன் -

ரிஷபம் - சனி வக்ரத்தால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் பலனளிக்கும். சுக்கிரன் ரிஷபத்தை ஆளும் கிரகம், இது சனி பகவானின் நண்பராகும். இத்தகைய சூழ்நிலையில், வணிகம் மற்றும் வேலையில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். செய்த முதலீட்டில் லாபம் பெறலாம். வருமானம் அதிகரிக்கும் அறிகுறியும் உள்ளது. மேலும் புதிய சொத்து வாங்கலாம்.

சிம்மம் - ஷஷ ராஜ யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சுப பலனைத் தரும். திடீரென்று பணம் குவியலாம். குடும்பச் சூழல் சிறப்பாக இருக்கும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் வரலாம். அதே கேந்திர திரிகோண யோகத்தில் தற்செயலான பண ஆதாயம், தடைபட்ட வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.

துலாம் - திரிகோண ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான நேரம், உங்கள் தொழிலில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் உங்கள் பணியால் மகிழ்ச்சியடைந்து, உயர் அதிகாரிகள் சில பெரிய பொறுப்புகளை வழங்கலாம்.

விருச்சிகம் - ஷஷ மகாபுருஷ யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் நன்மை பயக்கும். இந்த நேரம் வாகனம் மற்றும் சொத்து வாங்குவதற்கு சாதகமான பலனைத் தரும், நீங்கள் முன்னோர்களின் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். ரியல் எஸ்டேட் துறையில் பணிபுரியும் நபர்களுக்கு இந்த நேரம் அற்புதமாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம் - சனி பகவான் தற்போது கும்ப ராசியில் அமர்ந்து இந்த ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக பெரியவர்களுடனான உங்கள் உறவுகள் ஷஷ ராஜ யோகத்தின் மூலம் உருவாக்கப்படும். மறுபுறம், நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் இப்போது வெற்றி பெறும். அதே சமயம் கூட்டுப் பணிகளில் நல்ல வெற்றியைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் ஏப்ரல் 2024 வரை ஜொலிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News