ஷஷ மஹாபுருஷ யோக பலன்கள்: சனி பகவானின் நிலையினால் ஷஷ மகா புருஷயோகம் உருவாகும். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து கேந்திர வீட்டில் அதாவது சந்திரனுக்கு 1, 4, 7 அல்லது 10 ஆம் வீட்டில் சனி அமைந்தால் ஷஷ யோகம் உண்டாகும். ஷஷ யோகத்தின் பலன் காரணமாக, நபர் நியாயமானவராகவும், நேர்மையாகவும், நீண்ட ஆயுளுடனும், ராஜதந்திரத்தில் பணக்காரராகவும் மாறுகிறார். அத்தகையவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். மேலும், எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறும் திறன் அவர்களுக்கு உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட கணிப்பின் படி, ஜனவரி 17 அன்று, சனி தேவன் தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைந்தார். சனி இந்த ராசியில் சஞ்சரிக்கும் போது ஷஷ் மஹாபுருஷ் ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் 9 மார்ச் 2023 முதல் தொடங்கிய நிலையில், இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகம்  கிட்டத்தட்ட எல்லா ராசிகளுக்கும் நன்மை தரும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்த யோகம் அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்


மேஷம்: சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் உதிப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சுப பலன்கள் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களின் ஜாதகத்தில் பதினொன்றாவது வீட்டில் சனிபகவான் உதயமாகிறார். இது வருமானம் மற்றும் செல்வத்தின் வீடாக கருதப்படுகிறது. அதனால்தான் இந்த நேரத்தில் நீங்கள் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றம் அடைவீர்கள். இந்த ராஜயோகம் பணியில் இருப்பவர்களுக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கும் மிகவும் வரப்பிரசாதமான காலமாக இருக்கும்


சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு ஷஷ மகாபுருஷ ராஜயோகம் மிகவும் சாதகமாக அமையும். சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. இது திருமண வாழ்க்கைக்கான இடமாக கருதப்படுகிறது. அதனால்  உங்கள் வாழ்க்கை துணையுடன் உங்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களின் கல்யாண கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். பல நாட்களாக தடைபட்ட உங்களின் பணிகள் விரைவில் நிறைவேறும்.


மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!


கும்பம்: 


கும்பத்தில் சனி உச்சம் பெறுவதால் ஷஷ மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகத்தால் பொன்னான நாட்கள் தொடங்கப் போகிறது. கும்ப ராசிக்காரர்களின் லக்னத்தில் இந்த ராஜயோகம் உருவாகிறது. அதன் காரணமாக, கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதனுடன், நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள், அதிர்ஷ்டமும் உங்களை ஆதரிக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். பணியில் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். 


மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | மேஷத்தில் நுழையும் புதன்! சவால்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ