சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2024: ஜோதிட சாஸ்திரப்படி சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணியானவர் சுக்கிர பகவான். தற்போது சுக்கிர கிரகம் மகர ராசியில் இருந்து வெளியேறி கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி அடையப் போகிறது. கும்ப ராசியில் சனி ஆட்சி பெற்று பயணித்து வருகிறார், அந்த வகையில் சனியின் ஆட்சி ராசியான கும்பத்தில் வருகிற மார்ச் 7ஆம் தேதி காலை 10:55 மணிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைந்து, மார்ச் 30ஆம் தேதி வரை பயணிப்பார். அதன் பிறகு மாதத்தின் கடைசி நாளில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார். பொதுவாக  சுக்கிரன் சுப ஸ்தானத்தால் லட்சுமி தேவியின் ஆசி கட்டாயம் நிலைத்திருக்கும் என்பது ஜோதிட ஐதீகம். அப்படிப்பட்ட நிலையில் சுக்கிரனின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அதிகப்படியான லாபம் கிடைக்கும். இந்நிலையில் கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம் (Taurus Zodiac Sign) :
கும்ப ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். தொழிலதிபர்களுக்கு சிறப்பான நேரமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். கலை, ஊடகம் மற்றும் திரைப்படத் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு லாபகரமான நேரமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்தில் உயர்வை காண்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்த முடியும். 


மேலும் படிக்க | கண்ணேறு கண் திருஷ்டி நீங்க சுலபமான பரிகாரங்கள்! சிம்பிளா பிரச்சனையை முடிக்க வழிகள்!


துலாம் (Libra Zodiac Sign) :
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கூடும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் நீங்கள் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால். நிதி நிலை மேம்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியமும் முன்னேற்றம் அடையும். குடும்ப வாழக்கை நன்றாக இருக்கும். வேலையில் சில சவால்கள் சந்திக்க நேரிடலாம். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
 
கும்பம் (Aquarius Zodiac Sign) : 
கும்ப ராசிக்காரர்கள் சுக்கிரனின் பெயர்ச்சியால் (Venus Transit) சுப பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சமய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கலாம். நிதி நிலை மேம்படும். சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான செய்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Mahashivratri 2024: இந்த சிவராத்திரி சிவனுக்கு பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.. செல்வம் பெருகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ