கண்ணேறு கண் திருஷ்டி நீங்க சுலபமான பரிகாரங்கள்! சிம்பிளா பிரச்சனையை முடிக்க வழிகள்!

Kanneru Kazhithal : தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? கண்ணேறு, கண் திருஷ்டியை நீக்குவதற்கு என்ன பரிகாரம் பலன் தரும்? தெரிந்துக் கொள்வோம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 29, 2024, 10:08 AM IST
  • தொடர் தடைகளை போக்க என்ன செய்வது?
  • கண் திருஷ்டியை நீக்குவதற்கு பரிகாரம்
  • கண்ணேறு நீக்குவதற்கு பரிகாரம்
கண்ணேறு கண் திருஷ்டி நீங்க சுலபமான பரிகாரங்கள்! சிம்பிளா பிரச்சனையை முடிக்க வழிகள்! title=

கண்ணேறு, கண் திருஷ்டி என்ன செய்யும் என்ற கேள்வி பலருக்கும் வருவது தான். நமது மனத்திற்குள் தோன்றும் எண்ணம் அதிர்வலைகளாக வெளியில் சென்று, சம்பந்தப்பட்ட நபரை தாக்கி ஆக்கப்பூர்வமான அல்லது எதிர்மறையான வினைகளை செய்கிறது. இதில் நேர்மைறையான எண்ணங்களைப் பெற்றுத் தருவது வாழ்த்துக்களும் ஆசிகளும் என்றால், எதிர்மறையான மற்றும் பொறாமையான எண்ணங்கள் பாதிப்புகளைக் கொடுக்கின்றன.

ஒருவரின் எண்ணமானது, எதிரில் உள்ளவரை மட்டுமா பாதிக்கிறது? யாருக்கு எந்த எண்ணம் தோன்றினாலும், அது முதலில் சம்பந்தப்பட்டவரையும், அதன்பிறகு அவரின் எண்ண அலைகளுக்கு ஆளாகும் நபரையும் பாதிக்கிறது. ஆனால், எண்ணங்களுக்கு சொந்தக்காரரின் எண்ணமே அவருக்கான ஆற்றல் அல்லது விரயம் என்றால், அவரின் எண்ண அலைகளை எதிர்கொள்ளும் எதிரில் இருப்பவருக்கு ஏன் பாதிப்பு ஏற்படவேண்டும்? இதனால் தான் ஒருவரின் கண்ணேறு அல்லது கண் திருஷ்டியை கழிப்பதற்காக நாம் பல்வேறு பரிகாரங்களை செய்கிறோம்.

ஒருவர் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று அவருக்கு தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருந்தால் கண் திருஷ்டியால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்வார்கள். கண் திருஷ்டியை நீக்குவதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. 

மேலும் படிக்க | மார்ச் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்: பணம், புகழ், பதவி... அனைத்தும் இவர்கள் வசம்

கண் திருஷ்டி விநாயகர்
பிறரின் கண்ணேறு நம்மை பாதிக்காமல் இருக்க மிகவும் எளிமையான பரிகாரங்களும் உள்ளன. கண் திருஷ்டியை நீக்குவதற்கு கண் திருஷ்டி விநாயகரின் படத்தை வீட்டு வாசலில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் மாட்டி வைக்கலாம். விக்னங்களை தீர்க்கும் விநாயகர், கண்ணேறையும் கழித்துவிடுவார். கண்திருஷ்டி விநாயகர் படத்தை வாசல்படியில் நுழையும் இடத்தில், வடக்கு திசை பார்த்து வைக்க வேண்டும். திருஷ்டி பொம்மை படத்தையும் வைக்கலாம். 

விநாயகர் மந்திரம்
கண் திருஷ்டிகள் அனைத்தும் நீக்கி, தீய சக்திகளை அண்டவிடாமல் செய்யும் விநாயகர் மந்திரம் ஒன்று உண்டு. பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய், கருங்காலி மற்றும் வன்னி குச்சிகளை ஒரு பச்சைத்துணியில் சுற்றி, அதை கருப்பு நிற நூலால் மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். அந்த மூட்டைக்கு வெளியில் படிகாரம் ஒன்றை வைத்து கட்டிவிடவும். பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து நன்றாக சிவப்பு நிற நூலால் கட்டிக் கொள்ள வேண்டும்.

மூன்று பாகங்களாக பிரிந்து இருக்கும் இந்த பச்சை நிற பரிகார மூட்டையை வீட்டு நிலை வாசலுக்கு மேலே கட்டி விட வேண்டும். பிறகு கொப்பரை தேங்காய்க்கும், படிகாரத்திற்கும், எலுமிச்சம் பழத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து விநாயகருக்குரிய “ருண ரோக சத்ரு நிவாரண அனுக்கிரக கணபதயே வர வரத சர்வ ஜனமே வசமானய ஸ்வாஹா” மந்திரத்தை கூறி தூப தீபராதனை காட்ட வேண்டும்.

மாதந்தோறும் எலுமிச்சம் பழத்தை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.  மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால், கண்ணேறு உங்களை பாதிக்காது.

மேலும் படிக்க | சூரியனுடன் சனி இணைந்தால் கோடீஸ்வரனும் குப்பை மேட்டிற்கு வரலாம்! சிக்கல்களை தீர்க்க பரிகாரங்கள்!

தண்ணீரில் செம்பருத்திப் பூ பரிகாரம்

இது கண்ணேறுக்கு மட்டுமல்ல, அலங்காரமாகவும் இருக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கவும். அதில் சிவப்பு நிற செம்பருத்திப் பூவை போட்டு நிலை வாசலுக்கு வெளியில் வைத்துவிட வேண்டும்.

இது வீட்டிற்கு வரும் எதிர்மறை ஆற்றல்களை கிரகித்துக் கொண்டு, வீட்டில் இருப்பவர்களை பாதிக்காது. தினமும் தண்ணீரையும் பூவையும் மாற்ற வேண்டும். சிவப்பு நிற செம்பருத்தி பூ கண் திருஷ்டியை நீக்கக்கூடிய அருமையான பரிகாரம் ஆகும். 

கண்ணாடி பரிகாரம்
வீட்டிற்குள் நுழைந்தவுடன், வந்தவர்களின் முன் பெரிய நிலைக்கண்ணாடி இருப்பது போல் வைப்பதம் நல்லது.  இது, வருபவர்களின் எண்ண அலை அவர்களையே சென்று சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல, வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபட்டாலும் அது எதிர்மறை ஆற்றலை போக்கும். 

கல் உப்பு பரிகாரம்
கல் உப்பை திருஷ்டி சுற்றி போட்டு, தண்ணீரில் கரைய வைக்கலாம்.   

மேலும் படிக்க | எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன கவலை தீரும்? பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News