இந்து நாட்காட்டியின்படி இந்த ஆண்டு புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி, புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த முறை தீபாவளி மறுநாள் சூரிய கிரகணம் தோன்றும். தீபாவளி மறுநாளன்று சூரிய கிரகணம் தென்படுவதால், இது ராசிக்காரர்களை பாதிக்கும். அதன்படி அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புரட்டாசி மாத அமாவாசை அன்று தீபாவளி மற்றும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது . இந்த முறை சூரிய கிரகணம் அதற்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25 ஆம் தேதி நிகழும். இந்த ஆண்டு புரட்டாசி மாத அமாவாசை அக்டோபர் 24 ஆம் தேதி மாலை தொடங்குகிறது. அடுத்த நாள் அதாவது அக்டோபர் 25ஆம் தேதி மாலை 04.23 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கும். மேலும் 06.25 வரை இந்த சூரிய கிரகணம் நீடிக்கும். இருப்பினும் இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியவில்லை என்பதால் இந்த கிரகணம் ஏற்றுக்கப்படாது. அதே சமயம் இது ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, வடக்கு/கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பகுதிகளில் தெரியும்.


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி 2022; காத்திருந்தது போதும்... 4 ராசிகளுக்கு இனி விடிவுகாலம்: செல்வம் மழையாக பொழியும்


மறுபுறம், இந்த ஆண்டு ஐப்பசி பெளர்ணமி அன்று நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணம் காணப்படுகிறது. இந்த நாளில் துளசி பூஜை செய்யப்படுகிறது. இருப்பினும், சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும் மற்றும் அதன் சூதக காலமும் செல்லுபடியாகும். எனவே ஜோதிட சாஸ்திரப்படி ஒரு நாள் முன்னதாக துளசி பூஜை செய்வது நன்மை தரும்.  


ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணத்தின் தாக்கம் :
4 ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் நல்லதாக கருதப்படாது. இந்த தீபாவளி சூரிய கிரகணத்தின் போது ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகாமல் விழிப்புடன் இருக்க வேண்டும்.


ரிஷபம் - இந்த சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்க கூடும். 
மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்களின் தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி ராசி- கன்னி ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். 
துலாம் -  துலாம் ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அக்டோபர் மாதம் அமோகமாக இருக்கப் போகும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ