தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் சோமாவதி அமாவாசை! விரதம் அனுஷ்டிக்கும் முறை!
சோமாவதி அமாவாசை நாளில் விரதம் இருப்பதன் மூலம் பிரம்மா - விஷ்ணு - சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.
எல்லா அமாவாசையும் மிகவும் முக்கியமானது என்றாலும், திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். சோமாவதி அமாவாசை நாளில் விரதம் இருப்பதன் மூலம் பிரம்மா - விஷ்ணு - சிவன் என்னும் மூவரின் அருளால் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். அமாவாசை பித்ரு தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது.
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அதாவது ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்து மதத்தில் இதற்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஒரு வருடத்தில் 12 அமாவாசைகள் வருகின்றன. இதில் திங்கள்கிழமை வரும் அமாவாசை சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது
இம்முறை சோமாவதி அமாவாசை பிப்ரவரி 20ம் தேதி வருகிறது. இந்த நாளில் விரதம், வழிபாடு மற்றும் வழிபாட்டின் சிறப்பு முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. அதோடு சோமாவதி அமாவாசை நாளில் விரதம் அனுஷ்டித்து வழிபட்டால் பித்ரு தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை. மேலும், முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்தால், அவர்கள் ஆசி இருந்தால் வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். முன்னோர்கள் மகிழ்ந்து சந்ததியினரை ஆசிர்வதிப்பதால் வீட்டில் செல்வமும் வளமும் உண்டாகும்.
மேலும் படிக்க | மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!
சோமாவதி அமாவாசை அன்று மறந்தும் கூட செய்யக் கூடாதவை
சோமாவதி அமாவாசை இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்தது. வழிபாடு, விரதம், அன்னதானம் ஆகியவற்றை செய்வது சிறப்பு. எனினும் இந்த நாளில் சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் நினைத்தது நிறைவேறும். இந்த நாளில் பின்வரும் செயல்களைத் தவிர்ப்பது மிக அவசியம். இல்லை என்றால் விரத பலன்கள் கிடைக்காது. பாவங்களை போக்கி பித்ருக்களின் ஆசியை பெற்றுத் தரும் சோமாவதி அமாவாசையில் சில காரியங்கள் செய்வது கணவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சாஸ்திரம் கூறுகிறது.
1. இந்த நாளில் யாரையும் அவமதிக்கவோ, மனம் புண்படும் படி நடக்கவோ கூடாது. யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம்.
2. இந்த நாளில் அரச மரத்தை வணங்க வேண்டும்.
3. சோமாவதி அமாவாசை நாளில் வெகுநேரம் வரை தூங்க வேண்டாம். பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்தல் சிறந்தது.
5. சோமாவதி அமாவாசை அன்று விரதம் இருப்பவர்கள் உடல் உறவு கூடாது. இந்த நாளில் மறந்தும் கூட இறைச்சி, மது அருந்த கூடாது.
மேலும் படிக்க | 17 ஆண்டுகள் நீடிக்கும் புதன் மகாதிசை! ராஜ போக வாழ்க்கை அமையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR