மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!

Sun Transit In Aquarius 13 February 2023: இந்த முறை நடைபெறவிருக்கும் கும்ப ராசியில் சூரிய பெயர்ச்சியானது பலவித சிறப்புக்களைக் கொண்டுள்ளது. கும்ப ராசியில் ஏற்கனவே இருக்கும் சனி மற்றும் சுக்கிரனுடன் இணைகிறார் சூரியன் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 8, 2023, 10:06 AM IST
  • இன்னும் 5 நாட்களில் சூரியப் பெயர்ச்சி
  • மேஷத்திற்கு அருமையான எதிர்காலம்
  • சூரிய நமஸ்காரம் தினமும் செய்வது நல்லது
மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!  title=

Sun Saturn Conjunction: 2023 ஆம் ஆண்டு கும்ப ராசியில் சூரியப் பெயர்ச்சி நடைபெறவிருக்கிறது. தந்தை கிரகமான சூரியன் 13 பிப்ரவரி 2023 அன்று காலை 9:21 மணிக்கு கும்ப ராசிக்குள் நுழைகிறார். ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் சனியுடன் சூரியன் இணைந்திருப்பார். சுக்கிரன் கிரகமும் கும்ப ராசியில் இருக்கிறார். சுக்கிரன் கிரகம் அதன் கடைசிப் பாகையிலும், சனி மற்றும் சூரியன் அவற்றின் நெருங்கிய பாகைகளிலும் இருக்கும். சூரியன், சனி மற்றும் சுக்கிரனின் இந்த முக்கூட்டு சிலருக்கு யோகமாகவும் சிலருக்கு தோஷமாகவும் இருக்கும்.

சூரியன், சுக்கிரன் மற்றும் சனி என மூன்று வலுவான கிரகங்களும் கும்ப ராசியில் இணைந்து இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். 2023 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி காலை 6:13 மணி வரை சூரியன் கும்ப ராசியில் இருப்பார். அதன்பிறகு, சூரியன் மீன ராசிக்கு மாறுகிறார்.

தை மாதம் தனது பயணிக்கும் திசையை மாற்றிக் கொண்ட சூரிய பகவான் அதன் பிறகு, வேறொரு ராசிக்கு மாறுவது முக்கியமான பெயர்ச்சியாகும். ஆண்டுதோறும், பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் இந்த சூரியப் பெயர்ச்சி ஜோதிட சாஸ்திரத்தின்படி முக்கியமானது. அதிலும், சனியின் ராசியான கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிப்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தந்தை கிரகமான சூரியன் ஒன்பது கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழும் பூமி கிரகம், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம், சூரியமே. பூமியில் வாழும் ஜீவராசிகள் அனைத்திற்கும் பிரகாசத்தையும் ஆற்றலையும் வழங்குகிறார். சூரியனின் வெப்பம் என்னும் முக்கிய உயிர் சக்தி நம் உடலை இயக்குகிறது.

நம் வாழ்க்கை ஆற்றலுடன் இயங்க சூரியனின் அருள் அவசியம். மேலும் சூரிய கிரகம் இந்த முழு உலகத்தையும் ஆள்வதாக கருதப்படுவதால், சூரியன் கிரகங்களின் அரசன், பித்ரு காரகன் என்று மதிக்கப்படுகிறது.  

மேலும் படிக்க | மேஷத்தில் குரு பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட் லாபம்

கும்ப ராசியில் சூரியப் பெயர்ச்சி

சூரியன் கிரகம் இந்த உலகின் ஆன்மா என்று அறியப்படுகிறது மற்றும் ஒருவரின் ஜாதகத்தில் தந்தை மற்றும் ஆரோக்கியத்தின் காரணியாக கருதப்படுகிறது. அதிகாரம், அரசு மற்றும் ஆதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கும் சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால், அவருக்கு சிறந்த தலைமைத்துவ திறன்கள் இருக்கும்.

கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிப்பது புதிய வேலைகளைத் தொடங்க நல்ல காலமாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையின் வெற்றிக்கான அறிகுறியாகும், வெற்றியை விரும்புபவர்களுக்கு அடித்தளம் அமைக்க இதுவே சரியான நேரம், இந்த சமயத்தில் நல்ல பல விஷயங்களைத் தொடங்கலாம்.

புத்திசாலித்தனமாக செயல்பட்டால், கும்ப ராசியில் சூரியனின் சஞ்சாரம் யாருக்கு நல்ல பலன்களைத் தரும்? இதைத் தெரிந்துக் கொள்ளலாம். சரியான கோணத்தில் செயல்படுவதன் மூலம் செழிப்பை வழங்கும் சூரியன் மேஷ ராசிக்கு மாசி மாதத்தில் என்ன பலன்களைக் கொடுப்பார்?

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டின் அதிபதி சூரியன். இந்த சூரியன் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால், தந்தை கிரகமான சூரியன், உங்கள் பதினோராம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன் பதினொன்றாவது வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேறும் நேரம் இது என்பதைக் குறிப்பிடுகிறது.

உங்கள் வாழ்க்கையில், பல வகையான வாய்ப்புகள் வரும் காலம் இது, அதேபோல, உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் நேரம் இது. உங்களின் வேலைத்திறன் பாராட்டப்படுவதோடு, பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களுக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும் காலம் இது.

மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலா

ஆனால், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை கும்ப ராசியில் நடைபெறுவதால், அதீத நம்பிக்கை வைப்பதை மட்டும் தவிர்த்துவிடுங்கள். தன்னம்பிக்கையை அதீத நம்பிக்கையாக மாற்றுவது தவறு என்பதை புரிந்துக் கொண்டால் நல்லது. வயதில் மூத்தவர்கள் மற்றும் தொழில்முறை உறவுகளை அதீத நம்பிக்கை கெடுத்துவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

தொழிலில் இழப்பை சந்திக்காமல் இருக்க வேண்டுமானல் தன்னடக்கம் அவசியம். அதேபோல, பொருளாதாரரீதியான சவால்களும் உங்களை பாதிக்காமல் இருக்க வாய்க்கட்டுப்பாடு அவசியம்.

ஆனால், கும்பத்தில் சூரியன், உங்களுக்கு பணவரவைக் கொடுப்பார். சமூகத்தில் உயர்வுக்கான காலம் இது. சுற்றுலா செல்வது மற்றும் புனிதப் பயணம் செய்வது உங்களுக்கு மன அமைதியைத் தரும், கும்பத்தில் சனியுடன் இணையும் சூரியன் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பார் என்றாலும் சற்று கவனம் தேவை.   

புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும், சமூக வட்டம் விரிவடையும், வேலையில் முன்னேற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என கும்ப ராசியில் சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் சிறந்தப் பலன்களைப் பெற வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமைகளில், வெல்லதானம் கொடுக்கவும். தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அர்க்கியம் செய்தால் சுபபலன்கள் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்! இந்த 4 ராசிக்கார்கள் ஜாக்கிரதை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News