முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும். இங்கு நடக்கும் கந்த சஷ்டி திருவிழா வெகு பிரபலம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த விழா நடந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி, 25அம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், இரண்டு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ஆறாம் நாளான இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடடந்தது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.


மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகார உலா வந்து கோயிலை சேர்ந்த பின்னர் சாயாபிஷேகம் நடைபெறும். 



விழாவையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் திரளான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருருக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி கடலிலும் புனித நீராடுகின்றனர்.


சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரைக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சூரசம்ஹாரத்தை பக்தர்கள் எளிதில் காணும் வகையில், பல்வேறு இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  சுமார் 2,700 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் படிக்க | குருவின் அருளால் இந்த ராசிகளுக்கு மகாலட்சுமி கடாக்ஷம், லாபம் பெருகும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ