ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, மகிமை, செல்வம் மற்றும் இன்பம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது சுக்கிரன் ராசி மாற்றம் எனப்படும். ஜாதகத்தில் சுக்ர பகவான் உயர்ந்த இடத்தில் இருந்தால், அந்த நபர் சுப பலன்களைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. இந்த முறை சுக்கிரன் கிரகம் ஜூன் 18 அன்று அதாவது இன்று தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைகிறது. சுக்கிரனின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். அதன்படி இந்த ஆறு ராசியினருக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் அனுகூலமாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இங்கே காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. மேஷம்- இன்று அதாவது ஜூன் 18-ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் நுழையும் ஜூலை 13-ம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். அதன் பலன் மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்வில் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியும், பணப் பலனும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.


மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் 


2. ரிஷபம்- ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இன்று அதாவது ஜூன் 18 முதல் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை மேம்படும் மற்றும் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


3. கடகம்- கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுக்கிரனின் ஸ்தானம் உங்களின் தொழிலில் பதவி உயர்வு தரும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.


4. சிம்மம்- சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். இந்த நேரத்தில் நீங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள்.


5. கன்னி- கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்புகள் இருக்கும், மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.


6. விருச்சிகம்- சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டு. அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR