Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களுக்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த பெயர்ச்சுகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலை, அழகு, பெருமை, பணம், குடும்பம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் மார்ச் 31 ஆம் தேதி, கும்ப ராசியிலிருந்து மீன ராசியில் பெயர்ச்சி ஆகியுள்ளார். இவர் ஏப்ரல் 24, 2024 வரை மீன ராசியில் இருப்பார். அதன் பிறகு மேஷத்தில் நுழைவார். 


மாளவ்ய ராஜயோகம்


மீன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை (Malavya Rajayogam) உருவாக்கியுள்ளது. இது பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வத்தை அளிக்கும். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வெற்றியின் உச்சம் தொடுவார்கள். இந்த காலத்தில் பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி  இந்த பதிவில் காணலாம். 


3 ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகம்


ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பிரவேசித்திருக்கிறார். இந்த ராசியில் ஏற்கனவே சூரியன் உள்ளார். இந்த நிலையில் சூரியனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு இரண்டு கிரகங்களின் அருளும் கிடைக்கவுள்ளது. 12 ராசிகளில் இந்த சேர்க்கை காரணமாக 3 ராசிகளுக்கு மிகவும் சாதகமான பலன்களும் பணக்கார யோகமும் கிடைக்கும். 


ரிஷபம் (Taurus)


ரிஷப ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி சுபமான பலன்களை அளிக்கும். பணி இடத்தில் பல வித வெற்றிகள் கிடைக்கும். அரசியல் துறையில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல நேரம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும். மாளவ்ய ராஜயோகத்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும். 


மேலும் படிக்க | ஏப்ரலில் சூரியன் குரு சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை கொட்டும்


மிதுனம் (Gemini)


மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் உருவான மாளவ்ய ராஜயோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். சுக்கிரனும் சூரியனும் இணைந்திருப்பதால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நிதி ஆதாயங்களைப் பெறலாம். சுக்கிரன் கிரகத்தின் ராசி மாற்றத்தால் நிதி நிலைமை மேம்பட வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணம் செல்லக்கூடும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். நிலம், சொத்து சம்பந்தமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.


துலாம் (Libra)


சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு மேம்படும். மாளவ்ய ராஜயோகத்தால் உங்கள் வாழ்க்கையில் பல புதிய மாற்றங்கள் நிகழக்கூடும். வேலையில் முன்னேற்றமும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி... வாழ்க்கையில் உச்சத்தை தொட போகும் 3 ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ