)
Sun Transit 13 April: விரைவில் கிரகங்களின் ராஜாவான சூரியன் தனது ராசியை மாற்றப் போகிறார். தற்போது மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து பயணித்து வரும் சூரிய பகவான் ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் ராசியின் அதிபதியான மேஷ ராசியில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். சூரியனின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சூரிய பகவானின் இந்த முக்கிய நிகழ்வானது வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி நிகழப்போகிறது. மேலும் மீன ராசியில் பயணிக்கும் சூரிய பகவான் மேஷ ராசிக்கு நுழைவார். சூரியனின் இந்த பெயர்ச்சியின் காரணமாக, குரு மற்றும் சூரியனின் சேர்க்கை உருவாகும். ஜோதிடத்தில் சூரியன் மற்றும் குரு சேர்க்கை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சூரியனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் (Aries Zodiac Sign) : மேஷ ராசியில் சூரியன் மற்றும் குரு சேர்க்கையானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி சூரியன் மற்றும் குருவின் சுப தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். காதல் வாழ்க்கை மிகுந்த காதலுடன் நிறைந்திருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி நிலையும் சிறப்பாகவும் நன்றாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை காண முடியும். பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இப்போது அபரிமிதமான லாபம் கிடைக்கும்.
மிதுனம் (Gemini Zodiac Sign) : மிதுன ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சூரியன் (Sun Guru Transit) சேர்க்கையானது நன்மையாக அமையப் போகிறது. பல வழிகளில் இருந்து வருமானத்தை பெறுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவி உங்களுக்கு கிடைக்கும். உங்களின் திறமையால் தொழிலில் வெற்றி அடைவீர்கள். வாழ்க்கை துணையுடனான உறவு மேம்படும். உங்கள் தலைமைத்துவ பண்புகள் பிரகாசிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். முதலீடுகள் மூலம் நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
சிம்மம் (Leo Zodiac Sign) : மேஷ ராசியில் சூரியன் மற்றும் குரு சேர்க்கையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் முழு நம்பிக்கையுடன் நீங்கள் இருப்பீர்கள். செய்யும் வேலையிலும் கொடி கட்டிப் பறப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பண வரவு அதிகமாகும். நிதிநிலை நன்றாக இருக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ