சுக்கிரன்அஸ்தமனம்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!
Sukran Asta Effects: ஜோதிடத்தில் சுக்கிரன், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணி. எனினும் சுக்கிரன் பெயற்சிக்கும் பிறகு ஏற்படும் சுக்கிரம் அஸ்தமனத்தினால் சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sukran Asta Effects: ஜோதிடத்தில் சுக்கிரன் கிரகம், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணியாக கருதப்படுகிறது. எனினும் சுக்கிரன் அஸ்மனம் ஆவது சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது நகர்ந்து பெயர்ச்சியாகின்றன, அஸ்தமனம் ஆகின்றன, உதயமாகின்றன. செல்வத்தையும் செழிப்பையும் தருபவரான சுக்கிரன் ஏப்ரல் 25 தேதி அதிகாலை மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் பெயர்ச்சியானார். இந்நிலையில், ஏப்ரல் 29ம் தேதி இரவு அஸ்தமனம் ஆகிறார். சுக்கிரன் பெயர்ச்சியை போல்வே, சுக்கிரன் அஸ்தமனமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷ ராசியில் அஸ்தமிக்கும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்குபாதிப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிக்காரர்களை பற்றி அறிந்து கொள்ளலாம். ஏனெனில் இந்த நேரத்தில் நிதி இழப்புடன், உடல் ஆரோக்கியமும் மோசமடையக்கூடும். அவர்களது திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். இந்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்...
ரிஷபம் ராசி
சுக்கிரன் அஸ்தமனம் ஆவது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதி. மேலும், சுக்கிரன் கிரகம் வலுவிழக்கும், இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த நேரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருக்கவும். இல்லை என்றால் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்வீர்கள். மேலும், இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடனான உறவில் சில பதட்டங்கள் இருக்கலாம். கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும், இல்லையெனில் உங்கள் பணத்தை இழக்க நேரிடும்.
மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குரு
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் அஸ்தமனம் தீங்கு விளைவிக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். கையில் இருக்கும் பணத்தை இப்போது முதலீடு செய்யாதீர்கள். மேலும், இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடன் உறவுகள் பாதிக்கப்படலாம். இந்த நேரத்தில் வாகனம் அல்லது சொத்து வாங்குவதை தவிர்க்கவிம். மே 7க்கு பிறகு வாங்கலாம். மேலும், இந்த நேரத்தில் உங்கள் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்ப ராசி
சுக்கிரனின் அஸ்தமனம் கும்ப ராசிகளுக்கு சாதகமற்றதாக இருக்கலாம். இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. ஆடம்பர வசதிகளும் குறைவாக இருக்கும். அதே நேரத்தில், வேலை மற்றும் வியாபாரம் மந்தமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் சில விஷயங்களில் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த நேரத்தில், உங்கள் மனைவியுடன் சில பிரச்சனைகள் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில், உங்கள் காதல் உறவுகளில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்துவதற்கான பரிகாரங்கள்
சுக்கிரன் அஸ்தமனம் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில், சுக்கிரன் கிரகத்தை வலுப்படுத்த சில பரிகாரங்களை செய்வது பலன் கொடுக்கும். சுக்கிரனை மகிழ்விக்க வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, வெண்ணிற வஸ்திரம் அர்ப்பணித்து, வெண்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவதால், பிரச்சனைகளை தவிர்க்கலாம். நிதி இழப்பைத் தவிர்க்க, தினமும் ஸ்ரீசூக்தத்தைப் பாராயணம் செய்யவும். வெண்மையான பொருட்களை தானம் செய்வது பலன் அளிக்கும். இதனால் சுக்கிர பெயர்ச்சியினால் ஏற்படும் கெடு பலன்களில் இருந்து தப்பிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அரச ராஜ வாழ்க்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ