2024 ஐப்பசி மாத ராசிபலன்கள் : நவகிரகங்களும் தங்கள் இயக்கத்தால், ராசி நட்சத்திரம் என ஒவ்வொன்றாய் மாறிக் கொண்டே இருக்கின்றன. இதில், நவகிரகங்களின் அரசரான சூரியனின் பெயர்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் சஞ்சார மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒருவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் ராஜா சூரியன் மாதந்தோறும் தனது ராசியை மாற்றுகிறார். இன்று துலாம் ராசிக்கு பெயர்ச்சியான சூரியன், ஐப்பசி மாதத்தை உருவாக்கியிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'கிரகங்களின் ராஜா' வின் இன்றைய துலாம் ராசிப் பெயர்ச்சி, 6 ராசிக்காரர்களுக்கு அருமையாக இருக்கிறது. இன்று, அதாவது அக்டோபர் 17ம் தேதி காலை சூரியன் துலாம் ராசிக்குள் நுழைவதால் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


ஐப்பசி மாத ராசிபலன்


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் தடைகள், பின்னடைவை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியில் இது லாபகரமான நேரம். வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் தந்தையின் ஆதரவு இருக்கும் என்றாலும், அதிக பணிச்சுமையால் சோர்வான மனநிலை ஏற்படும். மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.  


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. நிதானமாக இருக்க வேண்டியது அவசியம், ஏற்படும் மாற்றங்களால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும் மாதம் இது.


மேலும் படிக்க | நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!


மிதுனம்: மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டமான மாதம் இது. ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், கணிசமாக நல்ல பலன்களே நடைபெறும். பொறுமையாய் இருந்தால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லது. ஏதேனும் ஒருவிதத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும் அளவுக்கு பலன்கள் இல்லையே என்று கவலை ஏற்படும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பணவரத்து அதிகரிக்கு. கடின உழைப்பு அதிகரித்தாலும், குடும்பத்தினரின் மகிழ்ச்சியைப் பார்த்தால் அனைத்தும் சரியாகிவிடும். உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.


சிம்மம்: சிம்ம ராசிக்கு வியாபாரத்தில் உயர்வு இருக்கும். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கலாம், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, கவனமாக இருந்தால் செலவுகளைக் குறைக்கலாம். குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம்.


துலாம்: துலாம் ராசியினர்களுக்கு குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான கவலைகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார். தாய் வழியில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.


மேலும் படிக்க | சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி! அனுஷ சுக்கிரனால் அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்!


விருச்சிகம்: மனதில் மகிழ்ச்சி பொங்கும் மாதம் இது. வசதிகள் குறைந்தாலும், வியாபாரத்தில் பண இழப்பு ஏற்பட்டாலும், தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்கும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்க்கும் மாதம் இது. சுகமான பயண வாய்ப்புகள் உண்டு, அது மனதை மகிழ்விக்கும்


தனுசு: ஆறுதலையும் உறுதியையும் கொடுக்கும் சூரியப் பெயர்ச்சி, தனுசு ராசியினருக்கு நல்ல வாழ்க்கைக்கான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுப்பார். பணப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். காரியத் தடைகள் வரலாம். வாழ்க்கையே வேதனையாக இருக்கலாம். இருந்தாலும் மனதில் உறுதி அதிகரிக்கும்.


மகரம்: மகர ராசியினருக்கு ஐப்பசி மாதம் குடும்பம், நண்பர்கள் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும். கல்வி தொடர்பான வேலைகள் அருமையாக நடைபெறும். வாழ்க்கையில் வெற்றி பெறும் காலம் இது.குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | புரட்டாசி மாத பிரதோஷ விரதம், வழிபாடு! தேவர்களும் வணங்கும் முக்தி கொடுக்கும் சிவ வழிபாடு!


கும்பம்: ஐப்பசியில் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணம் சிறப்பாக அமையும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும் மாதமாக ஐப்பசி மாதம் இருக்கும்.


மீனம்: பொறுமை குறைவு ஏற்படும் என்பதால், நாவடக்கம் அவசியம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் ஆக்ரமிக்கும். ஐப்பசி மாதம் மீன ராசியினருக்கு லாபமானதாக இருக்கும். ஆனால், சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் பிறக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ