சூரியப் பெயர்ச்சி 2024: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு தங்களுடைய இருப்பையும் இயக்கத்தையும் மாற்றுகின்றன. இந்த சஞ்சார மாற்றம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஏதேனும் ஒருவிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு இந்த பலன் சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கிரகங்களின் ராஜா சூரியன் மாதந்தோறும் தனது ராசியை மாற்றுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னும் ஒரே வாரத்தில் சூரியன், துலாம் ராசியில் நுழைகிறார். 'கிரகங்களின் ராஜா' வின் இந்த ராசிப் பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும் என்றால், மீதமுள்ள 7 ராசிகளுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும்.  அக்டோபர் 17ம் தேதி காலை 7.52 மணிக்கு சூரியன் துலாம் ராசிக்குள் நுழைகிறார்.  


மேஷம் (Aries Zodiac Sign) : மேஷ ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியை தரும். நிலுவையில் இருந்த பணிகள் முழுமையாக நிறைவடையும். பொருளாதார நிலை மேம்படும். வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு உண்டாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.


கடகம் (Cancer Zodiac Sign) : கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். நிதி ஆதாயம் உண்டாகும். நீதிமன்ற வழக்கில் வெற்றி தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மன அமைதியும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை.


மேலும் படிக்க | அஸ்தமாகும் புதன் மகிழ்ச்சியையும் அஸ்தமாக்கிவிடுவார்! உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்!


சிம்மம் (Leo Zodiac Sign) : சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில்ரீதியில், இலக்குகளை துரிதமாக அடையலாம். மனதில் உள்ள குறைகள் நீங்கும் காலம் இது. ஐப்பசி மாத சூரியப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


கன்னி (Virgo Zodiac Sign) : கன்னி ராசிக்காரர்களுக்கு அதீத பலன் கிடைக்கும். சமூதாயத்தில் அந்தஸ்தும், கௌரவமும் கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும்.


மகரம் (Capricorn Zodiac Sign) : மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், உடல்நலம் நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உண்டாகும். சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். தைரியம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ