ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களின் போக்குவரத்து, கிரகங்களின் எழுச்சி மற்றும் அஸ்தமனத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கிரகங்களின் இளவரசனான புதன் பகவான், வாக்கு சாதுரியம், அறிவு, உறவுகள், நட்பு, தொழில், வணிகம் போன்றவற்றுக்கு காரணமானவர். இன்று, செப்டம்பர் 14, சனிக்கிழமை, புதன் அஸ்தமனமாகிறார். இந்த அஸ்தமனத்தின் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு பெரிய கிரகத்தின் அருகில் சிறிய கிரகம் வரும்போதெல்லாம், சிறிய கிரகத்தின் சக்தி முற்றிலுமாக வீணாகிவிடும். இன்று புதன் சிம்ம ராசியில் மதியம் 12.50க்கு அஸ்தமித்துள்ளார். இப்போது செப்டம்பர் 23ஆம் தேதி கன்னி ராசியில் பிரவேசித்தார். அத்தகைய சூழ்நிலையில், இந்த காலகட்டத்தில் எந்த ராசிக்காரர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வோம்.
கன்னி ராசி
புதன் அஸ்தமனமாவது கன்னி ராசிக்காரர்களுக்கு அசுபமானது என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பணப் பிரச்சனைகள் ஏற்படலாம். கன்னி ராசியினர் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சகவாசம் தீங்கு விளைவிக்கும். அதேபோல வம்பு வழக்குகளில் இருந்து தள்ளியே இருக்கவும். திருமண வாழ்க்கைக்கும் இந்த சூழ்நிலை சரியானதல்ல என்பதால், கன்னி ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
புத்திசாலித்தனத்தை குத்தகைக்கு எடுத்திருப்பவர்களைப் போல பேசும் விருச்சிக ராசிக்காரர்கள், தற்போது வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது. அறிவுசார் செயல்பாடுகளுக்கு பெயர் வாங்கிய இவர்களுக்கு புதனின் அஸ்தமனம், மூளையை மழுங்கடித்துவிடும், சரியாக சிந்திக்க முடியாது. பண விரயம் ஆகும்.
மகரம்
புதன் அஸ்தமனம், மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. நஷ்டங்கள் பணத்தால் மட்டுமல்ல, மனதாலும் ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டும் மன அழுத்தம் அதிகரிக்கும்.
ரிஷபம்
புதன் அஸ்தமாவது ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பல தடைகள் ஏற்படலாம். மன உளைச்சல் அதிகரிக்கும். பணியிடத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. மனதில் உள்ளவற்றை அப்படியே பிறரிடம் பேசவேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மனதில் உள்ள ஆற்றாமையை யாரிடமாவது சொல்லிவிடுவது நல்லது. மன அழுத்தத்திற்கு காரணம், விஷயங்களை மனதோடு வைத்து புழுங்கிக் கொண்டிருப்பது தான் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். நிதானமாக யோசித்தால் நன்மை நடக்கும். குடும்பத்தின் மீது கவனமும் அக்கறையும் இருந்தால் அவர்கள் உங்களை ஆதரிப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ