கிரகங்களின் ராஜாவான சூரியன், ஒரு மாதத்திற்கு ஒருமுறை, தான் இருக்கும் ராசியை மாற்றிக் கொள்வார். அதற்கு நடுவில் நட்சத்திர பயிற்சியும் நடைபெறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணலாம். பங்குனி மாதத்தில் மீனத்தில் பெயர்ச்சியான சூரிய பகவான், மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். பங்குனி மாதத்தில், சூரியன் மீனத்தில் சஞ்சாரம் செய்வதால், பங்குனி மாதம் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதம் 31ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சூரிய பகவான், ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வரை அதில் நீடிப்பார். பின்னர் அஸ்வினி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவார். ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புத பகவான். புதன் கிரகமும் சூரியனும் நட்பு கிரகங்கள். இந்நிலையில் சூரிய பகவானின் ரேவதி நட்சத்திர பெயர்ச்சி சிலரது வாழ்க்கையில், சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.


ஜோதிடத்தில், 27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம். இது செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்நிலையில் சூரிய பகவான் ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சமயத்தில், சில ராசிகளுக்கு செல்வம் பெருகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.


ரிஷப ராசி


ரிஷப ராசியினருக்கு சூரியனின் பெயர்ச்சி, பொருளாதார நிலையை மேம்படுத்தும். அதிர்ஷ்டம் எல்லாவற்றிலும் கை கொடுக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகம் சார்ந்த பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் குறையும். 


மேலும் படிக்க | ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


மிதுன ராசி


மிதுன ராசியினருக்கு சூரியனின் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். இன்பம்வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.  உடன்பிறந்தவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத சில வருமான வாய்ப்புகள் ஏற்படும். 


கன்னி ராசி


திறமைக்கேற்ப புதிய வேலைவாய்ப்பு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உயர் பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில தனவரவுகள் சாதகமாகும். இழுபறியான பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். 


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Jupiter transit: 38 நாட்களில் குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள், பொற்காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ