ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Sevvai Peyarchi Palangal: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2024, 04:06 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மீனத்தில் பெயர்சியாவது மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
  • பணியிடத்தில் இதன் ஆக்கப்பூர்வமான தாக்கம் தெரியும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் உதவி உயர்வும் கிடைக்கும்.
ஏப்ரலில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள் title=

Sevvai Peyarchi Palangal: கிரகங்களின் பெயர்ச்சி ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள்,வக்கிரப் பெயர்ச்சி,வக்ர நிவர்த்தி என பலவித மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வீடு, மனை, ஆற்றல், நிலம், அறிவு ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள செவ்வாய் அடுத்த மாதம் மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். செவ்வாயின் பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களது பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodaic Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மீனத்தில் பெயர்சியாவது மிகவும் லாபகரமானதாக இருக்கும். பணியிடத்தில் இதன் ஆக்கப்பூர்வமான தாக்கம் தெரியும். மிதுன ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வும் உதவி உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பாராட்டுதல்களை பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். விளையாட்டு, காவல்துறை, மருத்துவம் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த காலம் அட்டகாசமாக இருக்கும். இப்போது தொடங்கப்படும் பணிகளால் லாபம் உண்டாகும். இப்போது செய்யப்படும் முதலீடுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

மேலும் படிக்க | Guru Peyarchi: மேஷ ராசிக்கு மே மாத குரு பெயர்ச்சி பலன்கள்! பணம் புகழ் செல்வாக்கு குவியும்!

கடகம் (Cancer)

மீனத்தில் செவ்வாயின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளை அளிக்கக் கூடிய வகையில் இருக்கும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். சிக்கல்கள் இருந்தால் அவை உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். இந்த காலத்தில் பிற ஊர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான நன்மைகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிடும் அனைத்து பணிகளும் நன்றாக நிறைவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாக இருக்கும்

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீனத்தில் செவ்வாயின் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். செவ்வாய் பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பண வரவு அதிகமாகும். திருமணத்திற்காக காத்திருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பொழுது திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த பணிகள் இப்பொழுது நடைபெறும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | உதயமானார் சனி: இனி இந்த ராசிகளின் தொல்லைகள் தீரும், மகிழ்ச்சி அதிகரிக்கும், லாபம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News