கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த காலமாகும். அது மட்டுமல்ல, கடக சூரியனால் ஏற்படும் ஆடி மாதத்தில் தெய்வ வழிபாடு அதிகமாகும், நல்ல காரியங்கள் செய்வதைத் தவிர்ப்பார்கள், அதற்கு காரணம், இந்த மாதத்தில் மூத்தோருக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் இறைவழிபாடு முக்கியமானதாக இருக்கும்போது சுப காரியங்களை வைத்தால், கவனம் சிதறிவிடும் என்பதால் தான் ஆடி, புரட்டாசி, மார்கழி என நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாதத்தை தெய்வங்களுக்காக மட்டுமே அர்பணித்திருப்பது இந்து மதத்தின் மாண்பாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்கிறது. அதிலும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு பெயரும்போது உருவாகும் தமிழ் மாதங்கள் தமிழரின் வாழ்வில் முக்கியமானவை. அந்த வகையில், ஜூலை மாத பெயர்ச்சியின்போது சூரியன் கடக ராசிக்குள் நுழைந்தார். கடக ராசியில் புதன் ஜூன் 29-ம் தேதி நுழைந்து சஞ்சரித்து வருகிறார்.


ஏற்கனவே புதன் இருக்கும் கடகத்தில் தற்போது சூரியனும் சஞ்சரிப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும். 


மேலும் படிக்க | வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!


சூரியன் புதன் இணைப்பு 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரக சேர்க்கை மட்டுமல்ல, அது எந்த ராசியில் இணைகிறது என்பதைப் பொறுத்தும் ஒவ்வொரு ராசிக்கும் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கின்றன. அதிலும் சூரியன், புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் புதாதித்ய யோகம் 3 ராசிக்கார்களுக்கு அருமையாக இருக்கிறது  


புதாதித்ய யோகத்தால் பலனடையும் ராசிகள்


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதிற்கு நெருக்கமானவர்களுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகளை புதாதித்ய ராஜயோகம் கொடுக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க ஆடி மாதத்தில் அன்னதானம் செய்வது நல்லது.


மேலும் படிக்க | ஆடி மாத சிவ வழிபாடு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! சிவனுக்கு பிடித்த சாவன் அபிஷேகங்கள்!


ரிஷபம்


ரிஷப ராசியினருக்கு புதன் மற்றும் சூரியனின் இணைவினால் அற்புதமான அதிர்ஷ்டம் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு நல்ல பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் என மகிழ்ச்சியைக் கொடுக்கும் புதாதித்ய ராஜயோகம் இது. தடைபட்டிருந்த வேலைகள் சுமூகமாக முடிவடையும், ஆடி மாதம் அன்னை பராசக்தியை வணங்கினால் சங்கடங்கள் எல்லாம் கரைந்தோடும்.


மகரம்


சூரியன் புதன் சேர்க்கையால் உருவாகியிருக்கும் புதாதித்ய ராஜயோகத்தால் வேலையில் பிடிப்பு உண்டாகும். இதுவரை இருந்துவந்த பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு முடிவு வரும். மனதில் அமைதியும் பாதுகாப்புணவும் மேம்படும். மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும் வகையில் நல்ல செய்திகள் வந்து சேரும். ஆடி மாதமான இந்த புனித மாதத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் நல்ல பலன்கள் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | அருள் பாலிக்கும் கடவுளை பணக்காரராக்கும் பக்தர்கள்! இந்தியாவின் பணக்கார கோவில்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ