தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்!

Sun Transit Names Of Lord Surya: ஆண்டுகள் 60 என்றும் பஞ்சாங்கத்தின்படி தமிழ் ஆண்டுகளுக்கு 60 பெயர்களும் உண்டு. இந்த ஆண்டு சித்திரை மாதம் தொடங்கியது குரோதி ஆண்டு.  

Lord Surya Peyarchi Names: சூரியன் மாதந்தோறும் பெயர்ச்சி ஆகும் நாளான்று உருவாகும் தமிழ் மாதங்களுக்கு பெயர்கள் இருப்பதுபோல, சூரியனுக்கும் 12 பெயர்கள் உண்டு. அதாவது சூரியன் பெயர்ச்சியாகும்போது இருக்கும் ராசிக்கு ஏற்ப அவரது பெயரும் மாறுகிறது. அந்த பெயர்களைத் தெரிந்துக் கொள்வோம்...  

1 /12

சித்திரை மாதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கொண்டு சூரியகொண்டு ஆயிரம் சூரியக்கதிர்களை வீசுகிறார்

2 /12

அர்யமான் என்னும் பெயரில் வைகாசியில் ஆயிரத்து முந்நூறு கதிர்களை அனுப்புகிறார் சூரியன்

3 /12

ஆனி மாதம் விஸ்வஸ் என்ற பெயர் கொண்ட சூரியன், அந்த மாதத்தில் ஆயிரத்து நானூறு கதிர்களை வீசுகிறார். 

4 /12

ஆடி மாதம் அம்சுமான் என்ற நாமத்துடன் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டிருக்கிறார் சூரிய பகவான்

5 /12

ஆவணி மாதம் பர்ஜன் என்ற திருநாமத்துடன் ஆயிரத்து நானூறு கதிர்கள் கொண்டவராக காட்சியளிப்பார் சூரிய பகவான்

6 /12

புரட்டாசியில் வருணன் என்ற திருநாமத்தில் ஆயிரத்து முந்நூறு கதிர்களுடனும் காட்சி தருவார் சூரியன்

7 /12

ஐப்பசியில் இந்திரன் என்னும் திருநாமம் சூடி, ஆயிரத்து இருநூறு கதிர்களுடன் திகழ்வார் சூரிய பகவான்

8 /12

கார்த்திகை மாதத்தில் தாதா எனும் பெயர் கொண்டு, ஆயிரத்து நூறு கதிர்களை வீசுவார் சூரியன்

9 /12

மார்கழி மாதத்தில் சூரியநாராயண் என்ற பெயருடன் ஆயிரத்து ஐந்நூறு கதிர்களைக் கொண்டு திகழ்வார் சூரியன்

10 /12

தை மாதத்தில் பூஷாவான் என்ற திருநாமத்துடன் ஆயிரம் கதிர்களைக் கொண்டிருப்பார் சூரிய பகவான்

11 /12

மாசி மாதம் பகன் என்ற திருநாமம் கொண்டு ஆயிரம் கதிர்களை பரவச் செய்கிறார் சூரியன்

12 /12

பங்குனியில் துவஷ்டா என்ற பெயரால் ஆயிரத்து நூறு கதிர்கள் கொண்டவராக திகழ்கிறார் சூரிய பகவான்