Tamil Rasi Palan Today : 12 ராசிகளுக்கும், அவரவர்களின் கிரகப்பலன்களுக்கு ஏற்றவாறு அன்றைய பொழுது அமையும். அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்:


மேஷ ராசிக்காரர்கள், இன்று புதிதாக சில உடற்பயிற்சி முறைகளை தொடங்குவர். இதனால், அவர்களின் உடலுக்கு பலனுண்டு. உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய, உங்கள் குடும்பத்தினர் முயற்சி செய்வர். சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். சிலருக்கு, தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.


ரிஷபம்:


நீங்கள் முதலீடு செய்த இடங்களில் நல்ல வருமானம் வரலாம். உங்கள் வேலையில், முக்கியமான பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படலாம். குடும்பத்துடன் சேர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேர வாய்ப்புள்ளது. 


மிதுனம்:


உங்களுக்கு தேவையான விஷயத்திற்கு நிதி உதவி கிடைக்கும். வேலையில் நீங்கள் காட்டிய கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கலாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு ஏற்படலாம். பக்தி பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 


கடகம்:


முன்னர் முதலீடு செய்திருந்த தொழில்களில் இருந்து நல்ல வருமானம் வரலாம். இன்று அலுவலகத்தில் இருந்து அனுகூலமான செய்திகள் வந்தடைய வாய்ப்புள்ளது. புதிதாக வாங்கிய ஒரு சொத்து, உங்களுக்கு வருமானத்தை தரக்கூடியதாக இருக்கும். 


சிம்மம்:


உடல் ரீதியாக பலவீனமாக உணர்பவர்கள், இன்று புத்துணர்ச்சி பெறுவீர்கள். இன்று உங்களின் நிதி நிலையால் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். வீட்டிலும், நீங்கள் செல்லும் இடங்களிலும் அமைதியான சூழல் நிலவலாம்.


கன்னி ராசி:


உங்கள் ஆரோக்கியத்தின் முன்னேற்றம், உங்களை உற்சாகமான மனநிலையில் வைத்திருக்கும். எதிர்பார்த்ததை விட அதிகமான செலவுகள் வர வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களாக இருப்பவர்கள், தங்களின் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். பெற்றோர் அல்லது குடும்பத்தில் இருக்கும் பெரியவருடன் சண்டை ஏற்படலாம். 


மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி ஒளிமயமான எதிர்காலம்..!!


துலாம்:


உங்களுக்கு பிடித்த செயல்களை செய்து உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள். நெடு நாட்களாக இருந்த கடனை முடிக்க இன்று வாய்ப்புள்ளது. ஏதேனும் பிடித்த திறனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வீர்கள். நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காரியம், இன்று நடைபெறலாம். 


விருச்சிகம்:


வெளி உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், எனவே சாப்பிடும் போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உருவாகலாம், அதற்கு உங்களை தயார் படுத்திக்கொள்வது கட்டாயம். ஒரு காரியத்தை செய்து முடிக்க, உங்கள் குடும்ப உறுப்பினரின் உதவியை நாட வேண்டியதாக இருக்கும். தொழில் ரீதியாக போட்டி ஏற்படலாம். 


தனுசு:


சமீபத்தில் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவார்கள். கடந்த கால முதலீடுகள் உங்களுக்கு லாபத்தை தரலாம். தொழில் ரீதியாக, நீங்கள் மற்றவர்களை விட முன்னோடியாக இருப்பீர்கள். உங்கள்  மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று மகிழ்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது சிலருக்கு வாய்ப்புண்டு. நெடுங்கால நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். 


மகரம்:


நீங்கள் ஒருவருக்காக எடுத்த முயற்சிகள், பலன் அளிக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் உங்களை வந்தடையலாம். சிலர், வார இறுதியில் வெளியில் செல்வதற்கான திட்டத்தை தொடங்குவீர்கள். சிலருக்கு நெடுந்தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 


கும்பம்:


உடல் நலனில் கவனம் செலுத்துவது முக்கியம். எதிலும் முதலீடு செய்வதற்கு முன்பு நன்கு ஆராய்வது முக்கியம். வீட்டில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்விற்கு காரணமாக இருப்பீர்கள். சிலருக்கு வீடு வாங்கும் அணுகூலம் உண்டு. 


மீனம்:


சிலர், தங்கள் குழந்தைகளின் நலனுக்காக சேமிப்பு கணக்குகளை தொடங்குவீர்கள். தொழில் ரீதியாக சாதனை புரிய இன்று நல்ல நாள். சிலர் மகிழ்ச்சியான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். பல நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரியனின் அருளால்... சித்திரை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ