தை அமாவாசை அன்று இதை செய்தால் முன்னோர் ஆசி கிடைக்காது
Thai Amavasai 2023: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறந்த நாளாக கருதப்படும் தை அமாவாசை தினத்தில், சில விஷயங்களை ஒருபோதும் செய்யக்கூடாது. இவற்றை தெரிந்து நீங்கள் கடைபிடித்தால் முன்னோர் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும்.
அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தும்போது நம் வாழ்க்கை இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பது ஐதீகம். அவர்களை அந்நாளில் நினைத்து செய்யும் வழிபாடு மூலம் அவர்கள் நமக்கு மன மகிழ்ச்சியுடன் ஆசி வழங்குவார்கள் என பொதுவான நம்பிக்கையாக இருக்கிறது. தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும், ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம், செய்ய கூடாத விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மேலும் படிக்க | தை அமாவாசையன்று இதை செய்தால், சனீஸ்வரரின் அருட்கடாட்சத்தால் வாழ்க்கை சிறக்கும்
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஒருவேளை அவர்களை அவமதித்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். மேலும், அன்றைய தினம் வாசலில் கோலம் போடக்கூடாது. சண்டை சச்சரவு எதுவும் செய்யக்கூடாது. ஏழைகளையும் தூய்மை பணி செய்பவர்களை அவமானப்படுத்தக்கூடாது என்று ஐதீகங்களில் கூறப்பட்டுள்ளது. நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்க கூடாது.
தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுப்பது சிறந்தது. முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கும். நிம்மதியும், மகிழ்ச்சியும் வீட்டில் நிறைந்திருக்கும்.
மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ