அனைத்து ராசியை சேர்ந்தவர்களுக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் ஒளிந்திருக்கும். ஒருவருக்கு இருக்கும் திறமை இன்னொருவருக்கு இருக்கும் என கூறி விட முடியாது. அந்த வகையில், 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் சிறந்த IQ (Intelligence quotient) திறன் இருக்குமாம். அந்த ராசியை சேர்ந்தவர்கள் யார் யார் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.கும்பம்:


கும்ப ராசியை சேர்ந்தவர்களின் சிந்தனைகள் பெரும்பாலும்  முற்போக்கு சிந்தனைகளகா இருக்கும். அது மட்டுமன்றி, இவர்களின் புதுமையான இயல்பு காரணமாக இவர்கள் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள், தங்களின் திறந்த மனதுடன், முற்போக்கானவர்களாகவும், புதிய யோசனைகளை ஆராய்பவராகவும் இருக்கின்றனர். இதன் மூலம் தாங்கள் செய்யும் விஷயங்கள் அனைத்திலும் மகிழ்ச்சியடைகிறார்கள். இதனால், கும்ப ராசியை சேர்ந்த பெரும்பான்மையானோர் தொலைநோக்கு பார்வையாளராகக் இருக்கின்றனர். இதனால் இவர்கள் அறிவுசார் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். 


2.கன்னி:


கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கைக்கான பகுப்பாய்வு மற்றும் விவரம் சார்ந்த அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் உன்னிப்பாக கவனிக்கும் இயல்பு மற்றும் சில விஷயங்களை துல்லியமாக ஆராய்தல் போன்றவை இவர்களை புத்திசாலிகளாக மாற்றுகிறது.  இவர்களின் அதீத கவனம் செலுத்தும் திறன், இந்த ராசியை சேர்ந்தவர்களை அறிவாற்றல் மிகுந்தவராக மாற்றுகிறது. கன்னி ராசிக்காரர்கள் பெரும்பாலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சிறந்து விளங்குவார்கள்.


3.விருச்சிகம்:


விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தீவிரமான சிந்தனையாளர்களாக அறியப்படுகின்றனர். சிக்கலான சூழ்நிலைகளை ஆராய்வதற்கும் அதில் இருக்கும் உண்மைகளை வெளிக்கொணருவதற்கும் இவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். விருச்சிக ராசிக்காரர்களின் அறிவுசார் ஆழம், பலரை ஆச்சரியப்படுத்தக்கூடும். சமயோசித புத்தி, மன உறுதி ஆகியவை அவர்களை வெற்றிக்கானா பாதையில் அழைத்து செல்ல உதவும். 


மேலும் படிக்க | சனி உச்சம்.. 30 ஆண்டுக்குப் பின் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


4.மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களில் பெரும்பாலானோர் பல்துறை சார்ந்த நபர்களாகக் கருதப்படுகிறார்கள். கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தும் திறன், பல்வேறு சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவை இவர்களுக்குள் மறைந்துள்ள குணாதிசயங்கள் ஆகும். மேலும், இவர்கள் அறிவுசார் விவாதங்களை அனுபவிக்கும் திறனிலும் சிறந்து விளங்குகின்றனர். இந்த ராசியை சேர்ந்த பெரும்பாலானோர் சவாலான துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சாதிப்பர்.


5.மகரம்:


மகர ராசிக்காரர்கள் லட்சியம், ஒழுக்கம் மற்றும் சிறந்த சிந்தனைகள் போன்ற பண்புகளுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர். அவர்களின் வலுவான பணி நெறிமுறை மற்றும் நீண்ட காலத்திற்கு திட்டமிடும் திறன் ஆகியவை சமூகத்தில் மாற்றாத்தை ஏற்படுத்த பங்களிக்கக்கூடும். மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் சவால்களுக்கு நடைமுறை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்கின்றனர்.


6.தனுசு:


தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆர்வமுள்ளவர்களாகவும், திறந்த மனதுடையவர்களாகவும், சாகசக்காரர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். கற்றல், புதிய யோசனைகளை ஆராய்வது மற்றும் அறிவைத் தேடுவது ஆகியவற்றில் அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இதனால் தனுசு ராசியை சேர்ந்த பலர், சிறந்த அறிவாளிகளாக கருதப்படுகின்றனர். 


மேலும் படிக்க | உச்சம் செல்லும் குரு.. இந்த ராசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு பொற்காலம்


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கணவனின் ஆயுளை கூட்டும் சோமவதி அமாவாசை..! வழிபாட்டு முறை, நல்ல நேரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ