முத்தேவர்களில் மூத்தோனாக விளங்கும் சிவபெருமான் முக்கண்ணன் ஆவார். மூன்று கண்களைக் கொண்ட சிவனின் மூன்றாவது கண் மிகவும் விசேஷமானது. இது பற்றிய குறிப்புகள், சிவபுராணம் உட்பட பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சிவபெருமானின் மூன்றாவது கண் எப்போது திறக்கும், அதன் விளைவுகள் யாவை என்பது தொடர்பாக சிவபுராணத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைவ சமயத்தில் சிவபுராணம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிவபுராணம் சிவபெருமானின் சக்தி, பக்தி மற்றும் மகிமை பற்றி விரிவாக பேசுகிறது. இந்த புராணத்தில் சிவபெருமானின் அனைத்து அவதாரங்களும் ஜோதிர்லிங்கங்களும் புரிந்துக் கொள்ளும்படி விளக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல சிவபுராணத்தில் சிவபெருமானின் மூன்றாவது கண் பற்றிய விளக்கமும் உள்ளது.


சிவபெருமானின் மூன்றாவது கண்  
பலரும் கூடியிருந்த இடத்திற்கு வந்த பார்வதி அன்னை, அங்கிருந்த சிவபெருமானின் அருகில் வந்து விளையாட்டுத்தனமாக சிவனின் இரு கண்களையும் தனது கரங்களால் மூடிவிட்டார். அன்னை பார்வதி, சிவபெருமானின் கண்களை மூடியவுடன், பிரபஞ்சம் முழுவதும் இருள் பரவி இருண்டுபோனது. உலகில் உயிரினங்கள் அனைத்தும் செய்வது அறியாமல் தவிக்கத் தொடங்கின. 


உலகத்தின் இந்த நிலையை போக்க எண்ணிய சிவபெருமான் தனது கண்களின் சக்தியினை நெற்றிக்குக் கொண்டுவந்து, அதை ஒளியாக பாய்ச்சியதும் உலகம் இயல்பானது. 


மேலும் படிக்க | ஆடியில் ஆலகால விஷம் அருந்திய நீலகண்டன் சிவனுக்கு காவடி! கங்கை நீரால் அபிஷேகம்!!


வீரியமான சிவனின் மூன்றாம் கண், உலகிற்கு இக்கட்டான காலம் வரும்போது தான் திறக்கும், ஏனெனில் அதன் சக்தி ஜ்வாலையை போன்று தீவிரமானது. சிவனின் பிற இரு கண்களைப் போன்று அருட்பார்வை கொண்டதாக நெற்றியில் தோன்றிய மூன்றாம் கண்ண் இருக்காது. 


சிவபெருமானின் ஒரு கண் சூரியன் என்றும், மற்றொரு கண் சந்திரன் என்றும் சொல்லப்படும் நிலையில், மூன்றாம் கண் ரெளத்திர ஸ்வரூபம் என்று அறியப்படுகிறது. சிவபெருமானின் மூன்றாவது கண் பார்வையில் விழுபவை எரிந்து சாம்பலாகிவிடும். இதற்கு உதாரணமாக காமன் தகனத்தைச் சொல்லலாம். 


சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்தபோது, காமன் தியானத்தில் இருந்த சிவன் மீது காமக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார். சிவபெருமானின் தவத்தை முறியடிக்க முயன்ற காமனைப் பார்த்து தனது மூன்றாவது கண்ணைத் திறந்துவிட்டார். அந்த நெருப்புப் பார்வையில் பட்டு காமன் எரிந்து சாம்பலாகிவிட்டார்.


நெற்றிக் கண் திறக்கும் சமயம்
வழக்கமாக சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறந்து மூன்று உலகங்களையும் பார்ப்பதாக சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர் தனது சீடர்களுடன் நந்தி வாகனத்தில் பயணம் செய்கிறார். அப்போது செய்யப்படும் தவறுகள், ஒழுக்கக்கேடான செயல்கள் சிவனை கோபப்படுத்திவிடும். எனவே, மாலை வேளைகளில், சண்டை போடுவது, வாக்குவாதம் செய்வது, தாம்பத்தியம் கொள்வது போன்ற விசயங்களில் ஈடுபடவேண்டாம்.  


மேலும் படிக்க | சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!


மற்றொரு நம்பிக்கையின்படி சிவனின் நெற்றிக்கண் ஞானத்தின் அடையாளமாகவும், அக்னியின் வடிவமாகவும் போற்றப்படுகிறது. ஞானிகளுக்கும் ரிஷிகளுக்கும் ஞானம் என்னும் ஒளியை வழங்கி, வழிகாட்டுவதற்காகவே சிவ பெருமான் நெற்றிக்கண்ணை கொண்டுள்ளார் என்பது அந்த தத்துவம்.


மனிதர்களுக்கும் சிவனைப்போலவே மூன்றாவது கண் உள்ளது என்றும், இது நெருக்கடியான காலத்தில் பயன்படுத்த வேண்டிய ஞானத்தையும், அறிவையும் குறிப்பது என்றும் கூறப்படுகிறது. 


சிவபெருமான் ஒரு யோகியாக இருந்து கடும் தவத்தால் ஞான ஒளியை பெற்றதாக சொல்லப்படுகிறது. யோகத்தின் தொடக்கமாகவும், முடிவாகவும் அமைவது சிவனே என்பதால் சிவன் ஆதியோகி என்றும் அழைக்கப்படுகிறார்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆடி மாத துவாதசி விரதம் வைத்தால் வைகுந்தத்திற்கு செல்வது உறுதி! அம்மன் அருளும் நிச்சயம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ