Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சிவன், தனது சிஷ்யர்களுக்கு யோக விஞ்ஞானம் கொடுத்த நாள் இன்று என்பதால் இந்துக்களின் முக்கியமானதாகும். குரு பூர்ணிமா என்பது, சிவன் ஆதிகுருவாக பரிணமானம் எடுத்த திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
வாழ்க்கையில் பாடம் கற்றுத் தரும் அனைவருக்கும் குரு பூர்ணிமா நாளன்று தலை வணங்கி மரியாதை செய்வது நல்லது
"குரு" என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ’இருளை அகற்றுபவர்’ என்று பொருள் கொள்ளலாம். தேடுதல் இருக்கும் யாருக்கும் வழிகாட்டியாக இருக்கும் யாரும் குரு தான்.
இந்த ஆண்டு ஜூலை 21ம் நாளான்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. குரு பூர்ணிமாவின் விசேஷங்கள் ஒன்றல்ல பல... அவற்றைத் தெரிந்துக் கொள்வோம்
குரு பூர்ணிமாவை பலரும் பல்வேறு குருமார்களுக்காக கொண்டாடுகின்றனர். அக இருளை அகற்றும் குருவை வணங்கும் இந்த நாளை புத்த பூர்ணிமா என்றும் வியாச பூர்ணிம என்றும் அழைக்கின்றனர்.
வேத கல்வி பயின்றவர்களும் பயில்பவர்களும் தங்கள் ஆசானைக் கற்றுக் கொள்ளும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று குரு பூர்ணிமா அனுசரிப்பது வழக்கம். தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர், இராமானுசர் என பலரையும் குரு பூர்ணிமா நாளன்று வழிபடுவது வழக்கம்
இயற்கை, தானாக எதனையும் சொல்லிக் கொடுக்காமல், தனது மெளனமான இயல்பால் கற்றுக் கொடுக்கும் மெளனகுரு என்பதால் இயற்கையை இந்நாளில் வழிபடுவோம். மலையே சிவனாக இருக்கும் இடங்களில் மாத மாதமே பெளர்ணமி சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது
பிரபஞ்சத்திற்கே ஆதிகுருவாக திகழ்பவர் சிவபெருமான். அவரே யோகக் கலையை பூமிக்கு அறிமுகப்படுத்திய குரு. திருவண்ணாமலையில் இயற்கையான மலையாக இருக்கும் சிவனை ஆடி பெளர்ணமி நாளன்று வழிபடுவதும், கிரிவலம் வருவதும் ஆதிகுருவுக்கு செய்யும் வழிபாடாக இருக்கும்
ஆடி மாத பௌர்ணமி நாளன்று உலகில் நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும், இந்த நாளன்று சந்திரனின் ஒளியால் இரவு நேரத்தில் சந்திரனை வழிபடுவது பல்வேறு தோஷங்களை போக்கும்
ஆடி மாதமே அம்மனுக்கு சிறப்பானது என்ற நிலையில், பெளர்ணமி நாளன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வதும் பூஜைகள் செய்வதும் விசேஷமான பலன்களைக் கொடுக்கும்