Today Rasi Palan 9th May 2024 : தமிழ் ராசிகளில் மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுள் ஒவ்வொரு ராசிகளுக்கும், ஒவ்வொரு கிரகப்பலன்கள் இருக்கிறது. இதில், நான்கு ராசிகளுக்கு இன்று செல்வமழை கொட்ட காத்திருக்கிறது. அந்த ராசிகள் என்னென்ன என்பதையும், அந்த ராசிகளுக்கான பலன்களையும் இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்:


இன்று, ஆரோக்கியமான சில பழக்கவழக்கங்களை பின்பற்ற முயற்சி செய்வீர்கள். வாழ்வில் மாறுதல் ஏற்படும் வகையிலான விஷயங்கள் இன்று நடக்கலாம். வேலை தொடர்பான விஷயங்களில் கவனம் முக்கியம். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வீட்டுமனை வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.


ரிஷபம் :


பெரிய இடத்தில் இருப்பவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்களுக்கு வருமானம் தரக்கூடிய பங்குகளில் முதலீடு செய்வீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தென்படும். சிலருக்கு திடீரென ஏற்படும் பணவரவினால் மகிழ்ச்சி பொங்கும்.


மிதுனம் :


உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் நிதி நிலைமையை உயர்த்தும் விஷயங்கள் நடைபெறும். பணியிடத்தில் உங்களை உயர்த்தும் வகையிலான விஷயங்கள் நடைபெறும். வீட்டில் சில ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் நெடுங்காலமாக காத்துக்கொண்டிருந்த பயணம் ஒன்று நடைபெற வாய்ப்புள்ளது. சொத்துகளை விற்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு அணுகூலமான செய்திகள் வந்து சேரும். 


கடகம் : 


ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் நாள். உங்கள் கழுத்தை இறுக்கிக்கொண்டிருந்த கடன் தொல்லைகள் அகல, இன்று வழிபிறக்கும். குடும்பத்தினருடனும் நெருக்கமானவர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது. வீட்டுமனை வாங்குவது குறித்த விஷயத்தில் நல்ல முடிவை எடுப்பீர்கள்.


சிம்மம்: 


உங்கள் தினசரி நடவடிக்கைகளால், உடல் நலனின் முன்னேற்றம் ஏற்படும். நெடு நாட்களாக உங்கள் கைக்கு வராமல் இருந்த தொகை, இன்று வந்து சேரலாம். வேலை செய்யும் இடத்தில் இன்று உங்கள் திறமையை காட்டும் நேரம் வரலாம். உங்கள் கைமீறி செல்லும் சூழ்நிலைகளில் இன்று அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் அன்புக்குரியோர் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். 


கன்னி:


உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவினால் உங்களுக்கு லாபம் ஏற்படலாம். மருத்துவம் மற்றும் ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இன்று அணுகூலமான நாள். உங்கள் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. அன்புக்குரிவர்களுக்காக ஒரு கடினமான வேலையை இன்று செய்து கொடுப்பீர்கள்.


துலாம்:


பல நாட்களாக மனதில் வைத்திருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். சில சிறந்த முதலீட்டு திட்டங்கள் உங்களுக்கு லாபத்தை தேடி தரும். நீங்கள் போட்டி போடும் ஒரு விஷயத்தில் உங்களுக்கு இன்று வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலர், தங்களின் அன்புக்குரியவருடன் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்வீர்கள். சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய வாய்ப்பு இது. 


விருச்சிகம்:


உங்களிடம் இருக்கும் தீய பழக்கங்களை விட்டொழிக்க இன்று சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஒரு சிலருக்கு இன்று வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பல நாட்களாக இழுபறியில் இருந்து வந்த வேலை முடியும். வீட்டுப்பணிகளில் ஒரு சிலர் கவனம் செலுத்துவீர்கள். சொத்து வாங்குவதில் இன்று சிலருக்கு அணுகூலமான சூழ்நிலைகள் அமையலாம். 


மேலும் படிக்க | அக்ஷய திருதியை 2024.... செல்வம் பெருக... ராசிகளுக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்


தனுசு:


ஆரோக்கியமான மனநலன் மற்றும் உடல் நலனுடன் வளம் வருவீர்கள். நீங்கள் நினைக்கும் காரியத்தில் கைக்கு எட்டும் வகையில்தான் வெற்றி இருக்கிறது. ஒரு சிலர், தங்கள் தொழிலில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வீர்கள். ஒரு சிலர், சிறிய பயணங்களை மேற்கொள்வீர்கள். வீடு அல்லது இடம் வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரலாம். 


மகரம்:


சில அசையா சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள். சில நாட்களாக ஆட்டம் காட்டி வந்த நோய் பாதிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீள்வீர்கள். ஒருவருக்கு எப்போதோ கொடுத்த கடன் தொகை, இன்று உங்கள் கைகளை வந்து அடையலாம். தொழிலை விரிவுப்படுத்தும் சில உத்திகளை இன்று கையாள்வீர்கள். உங்கள் குடும்பத்தினர் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பக்க பலமாக இருப்பர். 


கும்பம்:


படித்து கொண்டிருப்பவர்களுக்கு இன்று, அவர்களின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படலாம். பண ரீதியாக இன்று உங்களுக்கு திருப்திகரமான நாள் அமையும். உங்கள் வேலைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொண்டால், அதற்கு ஏற்றவாறு உங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 


மீனம்:


பூர்வீக சொத்துகள் உங்களை வந்து சேரலாம். தலைக்கு மேல் வேலை இருந்தால் சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த பணிகளை செய்ய தொடங்குவது நல்லது. உங்கள் உடல் நலனில் இன்று அதிக அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தினர் ஒருவர் வந்து கூறும் செய்தி, உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுற்றுலா செல்ல நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். 


மேலும் படிக்க | குறையாத செல்வத்தை பெற... அக்ஷய திருதியை நாளில் செய்ய வேண்டிய ‘சில’ தானங்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ