ஜோதிடத்தின் பார்வையில் டிசம்பர் 2022 மிகவும் முக்கியமானதாக இருக்கும். 2022-ம் ஆண்டின் கடைசி நாட்களில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மற்றும் ராசிகளின் சேர்க்கை திரிகிரஹி யோகத்தை உண்டாக்குகிறது. இந்த திரிகிரஹி யோகம், மகர ராசியில்  சனி, புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகிறது. இது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.  டிசம்பர் 28 ஆம் தேதி, புதன் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசியில் நுழைகிறார், அதற்கு அடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் மகர ராசிக்குள் நுழைகிறார். அதே நேரத்தில், சனி ஏற்கனவே மகரத்தில் உள்ளது. இந்நிலையில் சனி, புதன், சுக்கிரன் இணைந்து மகர ராசியில் திரிகிரஹி யோகம் உண்டாகும். இதன் மூலம் 2022ம் ஆண்டு முடிவடைந்து 2023ம் ஆண்டில்  குறிப்பிட்ட 4 ராசிகளின் தலைவிதி மாறும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரிகிரஹி யோகம் 4 ராசிகளின் தலைவிதியை மாற்றும்


மேஷம்:


மகர ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தரும். இந்த நபர்கள் தங்கள் தொழிலில் பெரிய சாதனைகளைப் பெறலாம். புதிய தொழில் தொடங்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். முதலீடு செய்வதற்கும் நல்ல நேரம் அமையும். மொத்தத்தில் காலம் எல்லா வகையிலும் சாதகமாக இருக்கும்.


கடகம்:


சனி, புதன், சுக்கிரன் இணைவதால் உருவாகும் திரிகிரஹி யோகம் மிகவும் சக்தி வாய்ந்தது மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இந்த மக்கள் செல்வத்தின் அடிப்படையில் பெரிய நன்மைகளைப் பெறலாம். நீதிமன்றத்தில் சொத்து சம்பந்தமான வழக்கு ஏதேனும் இருந்தால், அதன் முடிவு உங்களுக்கு சாதகமாக வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் முடியும். வியாபாரம் நன்றாக நடக்கும்.


மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!


கன்னி:


கன்னி ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகமும் சுப பலன்களைத் தரும். இதுவரை நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் இப்போது அடையலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
 
மீனம்:


சனியின் ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகம் மீன ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவை தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும். மறக்கமுடியாத குடும்பப் பயணம் செல்லலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ