குரு உதயம் எச்சரிக்கை! எந்த ராசிகளின் வாழ்க்கையில் பணப்பிரச்சனை அதிகமாகும்?
Guru Uday 2024: ஜோதிடத்தின்படி, தேவர்களின் குருவான வியாழன், வக்ர நிலையில் இருக்கும் நிலையில், எதிர்வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிஷப ராசியில் உதயமாகிறார். வக்ரமாக இருக்கும் குருவின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்.
Guru Uday 2024: தற்போது குருவின் ராசியில் 3 கிரகங்கள் சஞ்சரித்து வரும் நிலையில், தேவ குருவான வியாழன், ரிஷபத்தில் அஸ்தமனமாகி உள்ளார். மே 1ஆம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சியான குரு பகவான், தற்போது அஸ்தமன நிலையை முடித்துக் கொண்டு சில நாட்களில் உதயமாகவுள்ளார். ரிஷப ராசியில் உதயமாகப் போகும் குரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தந்தால், சிலருக்கு துரதிருஷ்டத்தைத் தருவார். தேவகுரு வியாழனின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரச்சனைகளை சந்திக்குக்ம் என்பதை அறிந்துக் கொண்டு எச்சரிக்கையாக நடந்துக் கொள்வோம்.
ரிஷபம்: ஜோதிடத்தின் படி, குரு பகவான் ரிஷப ராசியில் உதயமாவது அதன் சொந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நல்லதில்ல்லை. ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நிதி இழப்பு உருவாகலாம் என்பதால் கவனமாக செயல்படவும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் சிறிய மாற்றமாவது தற்போது ஏற்படும். வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமானால், பொறுமையை கடைபிடிக்க வேண்டும். குருவின் உதயம் மாணவர்களுக்கு மனச்சோர்வைக் கொடுக்கும். குடும்பத்தில் உறவுகள் சுமூகமாக இருக்காது.
சிம்மம்: ஜோதிடத்தின் படி, குரு உதயமாகப் போவது சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மன வருத்தத்தைத் தரும். வாழ்க்கையில் நன்மை இப்போதாவது வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, குரு பகவான் உச்சம் பெறுவதால் நிவர்த்தி மேலும் தள்ளிப் போகும். நண்பர்களின் ஆதரவை இழக்க நேரிடலாம், எது நடந்தாலும் பொறுமையாக இருப்பது நல்லது. அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள், எந்த சூழ்நிலையிலும் வாய் வார்த்தைகளை கவனத்துடன் பேச வேண்டும், இல்லாவிட்டால் நீண்ட காலத்திற்கு மனநிம்மதி இழக்க நேரிடும்.
தனுசு: அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும், உதயமாகும் குரு உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவார்.. பெரியவர்களின் ஆதரவு இருக்காது. அனைத்து பிரச்சனைகளிலும் தெளிவாக ஆலோசித்து, பெரியவர்களின் அறிவுரைப்படி முடிவெடுக்கவும். பண ஆதாயம் உண்டாகும் என்றாலும், பணவிரயமும் இருக்கும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | புதன் மகாதசை காலத்தில் புதனை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ