ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் தனது ராசியை மாற்றுவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசிக்கு மாறினார். ஜனவரி 17, 2023 வரை சனி பகவான் இந்த நிலையில் இருப்பார். இதனால் சில ராசிக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, இந்த ராசிக்காரர்களுக்கு ஜனவரி 17, 2023 வரை சனியின் தாக்கம் இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த நாளில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சனியின் கோபத்தைத் தவிர்க்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்


விருச்சிகம்: மகர ராசியில் சனி சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்கள் அசுப பலன்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில், இந்த நபர்கள் தங்கள் வார்த்தைகளால் குறைவாகவும், செயல்களால் அதிகமாகவும் தொடர்புகொள்வார்கள். இந்த நேரத்தில் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மோசமடையக்கூடும். இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படலாம். எனவே வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். இதுமட்டுமின்றி வேலை, வியாபாரம் போன்றவற்றில் அதிக கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | குருவின் அருளால் இந்த ராசிகளுக்கு மகாலட்சுமி கடாக்ஷம், லாபம் பெருகும் 


தனுசு: ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்களும் இந்தக் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிதி விஷயங்கள் மேம்படும், ஆனால் இந்த காலகட்டத்தில், தற்செயலான செலவுகளும் அதிகரிக்கும். இது உங்கள் பட்ஜெட்டை கெடுத்துவிடும். இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும் மற்றும் ஆரோக்கியம் மோசமடையக்கூடும்.


கும்பம்: இந்த ராசிக்காரர்களும் ஜனவரி மாதம் வரை கவனமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில், சனி நிதி நிலைமையை பலவீனப்படுத்தலாம். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் செய்யாதீர்கள். அதே சமயம் அலுவலகம் போன்றவற்றில் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்து கண்ணியமாக நடந்து கொள்ளவும்.


மகரம்: அக்டோபர் 23 ஆம் தேதி சனி மகர ராசியில் சஞ்சரிக்கிறார். உடல் மற்றும் மன துன்பங்களை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில், செலவுகள் அதிகரிக்கலாம். 


சனி மார்கியைத் தவிர்க்க இவற்றைச் செய்யுங்கள் 


* சனிக்கிழமையன்று, சனி கோவிலுக்குச் சென்று, காலையிலும் மாலையிலும் கடுகு எண்ணெயை சமர்பிக்கவும்.
* சனிக்கிழமையன்று ஒரு வெண்கல கிண்ணத்தில் கடுகு எண்ணெயை நிரப்பி, அதில் உங்கள் முகத்தைப் பார்க்கவும். இதற்குப் பிறகு, கிண்ணத்துடன் அதை ஏழை அல்லது தேவையுள்ள நபருக்கு தானம் செய்யுங்கள். 
* ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனிக்கிழமையன்று, ஆல மரத்தை வலம் வந்து, கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும். 
* அனுமனை வணங்குங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நிலை மாறுகிறார் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, பணியிடத்தில் முன்னேற்றம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ