நவம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா?

நவம்பர் 2022 சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நல்ல பலன்களை கொண்டுவர உள்ளது. இவர்கள் நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 28, 2022, 06:18 AM IST
  • தனுசு ராசிக்காரர்கள் பொறுமையுடன் செயல்பட்டால், அதிக வெற்றிகளை காணலாம்.
  • அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
  • முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
நவம்பர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? title=

ராசிபலன், நவம்பர் 2022: நவம்பர் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஜோதிட ரீதியாக நவம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை அறிய பலர் ஆவலாக உள்ளனர். எந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் உள்ளது. ஜோதிட கணக்கீடுகளின் படி, நவம்பர் 2022 சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நல்ல பலன்களை கொண்டுவர உள்ளது. இவர்கள் நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள். நவம்பர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். பெரிய நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டால் அனைத்து வேலைகளும் கைகூடும். கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலதிபர்கள் தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லக்கூடும். சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் நன்மைகளைக் கொண்டு வரும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கோபத்தைத் தவிர்க்கவும். வெளியூர் பயணம் கைகூடும். தொழில் நன்றாக இருக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த இடமாற்றம் பல நன்மைகளை அள்ளித் தரும். உங்கள் மிருதுவான பேச்சால், பல பணிகள் நடந்துமுடியும். 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் மனதில் கலக்கம் இருந்துகொண்டே இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் கைகூடும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் படிக்க | நவம்பர் 2022 ராசிபலன்: நவம்பரில் 'தன யோகம்' பெறும் ‘சில’ ராசிகள்! 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் அனைத்து பணிகளிலும் முழு நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் பெருகும். முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். பேச்சில் பணிவு இருக்கும். இதனால் பல காரியங்கள் எளிதாக நடக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நல்ல உணவை உண்டு மகிழுங்கள்.

துலாம்:

துலா ராசிக்காரர்களின் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நம்பிக்கை மிகுதியாக இருக்கும். இதன் காரணமாக, அனைத்து வேலைகளும் எளிதாக நடந்துமுடியும். பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த வாய்ப்பு இப்போது கிடைத்துவிடும். இப்போது முதலீடு செய்ய ஏற்ற நேரமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீடால் எதிர்காலத்தில் நன்மைகள் ஏற்படும். அதிருப்தி அடையும் தருணங்கள் வந்தாலும், உடனடியாக அவை சரிசெய்யப்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பண வரவு சாதகமாக இருக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் பொறுமையுடன் செயல்பட்டால், அதிக வெற்றிகளை காணலாம். அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். ஆட்சி நிர்வாகத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்துடன் சுற்றுலா செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பரின் உதவியால் எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு பணி இடத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பணியின் நோக்கம் விரிவடையும். வருமானம் அதிகரிக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் மனைவியை நன்றாக நடத்துங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு இப்போது கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இது ஏற்ற நேரமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | துலாமில் இணையும் புதன்-சுக்கிரன்; லக்ஷ்மி நாராயண யோகம் பெறும் '3' ராசிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News