வரலட்சுமி விரதம் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் நாளை (25 ஆகஸ்ட் 2023) வருகிறது. செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை மகிழ்விக்க வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் வரலட்சுமி பண்டிகை கொண்டாடுகிறோம். இந்த விரதம் மற்றும் வழிபாட்டின் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற்று, செல்வம், பெருமை, குழந்தை, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைப் பெறுகிறார். இந்த விழா தென்னிந்திய மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரத நாளில்,பெண்கள் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக நாள் முழுவதும் விரதமிருந்து லட்சுமி தேவியை வழிபடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், வரலட்சுமி விரதத்தின் மங்களகரமான நேரம் மற்றும் வழிபாட்டு முறை குறித்து இங்கு பார்க்கலாம்.


மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும் 


வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்கள்:
சின்ன வாழைக்கன்று இரண்டு
தோரணம் (கிடைத்தால்)
மாவிலை தோரணத்திற்கு.
முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு
அம்பாளை வைக்க சொம்பு.


காதோலை இரண்டு பக்கமும் வைக்க
கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
தாழம்பூ
சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)


பூஜைக்கு தேவையான பொருட்கள்:
திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
பஞ்ச பாத்திரம், உத்தரினி.
இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
அர்க்கியம் விட கொஞ்சம் பால்


நைவேத்திய பொருட்கள்:
இட்லி
அப்பம்
வடை (உளுந்து வடை)
கொழுக்கட்டை
வெல்ல பாயசம்
கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)


வரலட்சுமி விரதம் 2023 பூஜை நேரம்:
வரலட்சுமி தேவியை வழிபட்டால்போது ஒரு குறிப்பிட்ட லக்னம், அது நீண்ட கால செழிப்பை அளிக்கிறது. நாளை (ஆகஸ்ட் 25) வரலட்சுமி விரதம் என்பதால், அந்நாளில் 4 முறை வழிபாட்டுக்கு உகந்தது. இவற்றில் இருந்து உங்களுக்கு பொருத்தமான நேரத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


முதல் வழிபாடு நேரம் : சிம்ம ராசியில் - காலை 05.55 முதல் 07.42 வரை
இரண்டாம் வழிபாடு நேரம் : விருச்சிக ராசியில் - மதியம் 12.17 முதல் 02.36 வரை
மூன்றாம் வழிபாடு நேரம் : கும்ப ராசியில் - மாலை 06:22 முதல் 07:50 வரை
நான்காவது வழிபாடு நேரம் : ரிஷபம் ராசியில் - இரவு 10:50 முதல் 12:45 வரை.


இந்தநாள் சர்வார்த்த சித்தி யோகம் காலை 05.55 மணி முதல் 09.14 மணி வரை இருக்கும். மறுபுறம், ஆகஸ்ட் 26 சனிக்கிழமை காலை 09.14 முதல் 05.56 வரை ரவியோகம் இருக்கும்.


வரலட்சுமி விரதம் 2023 பூஜை எப்படி செய்ய வேண்டும்:
கலசத்தில் சுத்தமான தண்ணீரை நிரப்பி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்திரம், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலான பரிமள (தூய்மையான) பொருட்களைச் சேர்த்து, கலசத்தின் மேலே தேங்காய் மற்றும் மாவிலையால் அலங்கரித்து, வழிபாட்டில் வைத்து, 'அம்மா மகாலட்சுமி தாயே! எங்கள் வீட்டுக்கு வாம்மா! எங்கள் குடும்பத்தாரை ஆசீர்வாதம் செய்யம்மா!’ என்று மனதாரப் பிரார்த்தித்து, பூஜையைத் துவக்குங்கள். அன்னையை வழிபடும் போது, அன்னையின் மனதில் குடிகொண்டிருக்கும் நாராயணனையும் சேர்த்து பூஜிக்கலாம். 


வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவலோக மங்கை சித்ரநேமி வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார். வரலட்சுமி நோன்பை எடுக்கும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.


எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோ டு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோ த்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். அன்னைக்கு படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்து, தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம். சம்பிரதாயப்படி விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | திடீர் பண வரவு: சனி பகவானின் அருளால் இந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும், தலைவிதி மாறும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ