தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகர், முழு முதற் கடவுளாக போற்றப்படுகிறார்.  நாம் தொடங்கும் அனைத்து பணிகளும் சுமுகமாகவும், முழுமையாகவும் முடிய விநாயகப் பெருமானை வழிபட்டு தொடக்க வேண்டும் என்பது ஐதீகம். கணபதியை வணங்கினால் காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினைகள் எதுவும் நெருங்காது. விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபட்டால் வளமான வாழ்வு பெற்ற சந்தோஷமாக வாழலாம் என்பது நம்பிக்கை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விநாயகர் வழிபாடு இல்லாமல் எந்த விதமான பூஜையும் முழுமையடையாது. ஆகாயம், பூமி, நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களையும் இணைத்து மனித உடல் உருவாக்கப்பட்டது. ஐந்து கூறுகளை ஒருங்கிணைக்கவும், தடைகளை நீக்கி மங்களம் உண்டாகவும், வாஸ்து சாஸ்திரத்தில் விநாயகப் பெருமானின் சிலை உபயோகப்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது.


விநாயகர் சிலையை வைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:


பொதுவாகவே வீட்டில் விநாயகர் சிலை வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. உங்கள் வீட்டில் பணம், அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை குறையாமல் என்றென்றும் நிறைந்திருக்க, உங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் போது, சில வாஸ்து விதிகளை (Vastu Tips) கடைபிடிப்பது பலன் அளிக்கும். விநாயகர் சிலையை வைக்கும் போது, வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதால், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.


1. வீட்டில் விநாயகர் சிலையை வைக்கும் போது, உட்கார்ந்த நிலையில் இருக்கும் சிலையையே தேர்ந்தெடுக்க வேண்டும். நின்ற கோலத்தில் இருக்கும் விநாயகர் சிலை ஏற்றது அல்ல. ஆனால், உங்கள் பணியிடம் அல்லது அலுவலகத்தில் நின்ற கோலத்தில் இருக்கும் விநாயகர் சிலையை வைக்கலாம் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 


2. வாஸ்து சாஸ்திரத்தின் படி, விநாயகர் சிலையை வீட்டின் கதவுக்கு வெளியே வைக்கக் கூடாது. வீட்டிற்குள்ளே தான் வைக்க வேண்டும்.


3. விநாயகர் சிலை வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. எனினும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட, வீட்டில் வெண்கல நிற சிலையை வைப்பது நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது..


4. வலது புறத்தில் தும்பிக்கை கொண்ட வலம்புரி விநாயகப் பெருமானை வீட்டில் வைத்து வழிபடுவது உலகச் செழிப்புக்கு வழி வகுக்கும்.


மேலும் படிக்க | வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!


5. வாஸ்து சாஸ்திரத்தில் ஸ்படிகம், சிறந்த உலோகமாகக் கருதப்படுகிறது. நம் வீட்டில் ஸ்படிகத்தால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது, மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. விநாயகப் பெருமானுடன் ஸ்படிகத்தில் செய்த மகாலட்சுமியையும் சேர்த்து வழிபட்டால் செல்வமும், அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும். 


6. மாம்பழத்தோல் மற்றும் வேப்பங்கொட்டையால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வீட்டிற்குள் வைப்பது மிகவும் நல்லது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.


சங்கடங்களை நீக்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு


கல்வி, அறிவுத் திறன், புத்தி கூர்மை, வெற்றி, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றி அள்ளிக் கொடுக்கும், விநாயக பெருமானை சங்கடஹர சதுர்த்தி அன்று, 21 கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து, அருகம்புல் மலர்கள் போன்றவற்றை சமர்பித்து வணங்கினால், அனைத்து விதமான தடைகளும் நீங்கும்.


மூலப்பொருளோன், முழுமுதற் கடவுள் என்று சொல்லி வணங்குவது விநாயகரைத் தான். எந்த செயல்களை தொடங்கும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார் விநாயகர். அதனால் தான் அவர் எல்லோருக்கும் பொதுவான கடவுள்காவும் இருக்கிறார். எளிமையான வழிபாட்ட்டிலேயே அவர் தனது அருளை பரிபூரணமாக கொடுக்கிறார்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | ஆடி மாத சிவ வழிபாடு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! சிவனுக்கு பிடித்த சாவன் அபிஷேகங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ